விசா இல்லாமல் இலங்கை செல்லலாம்; இலங்கை அரசு அதிரடி!
இந்திய, சீன நாடுகளைச் சேர்ந்த சுற்றுளா பயணிகளுக்கு விசா விலக்கு அளிக்கப் இலங்கை பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்திய, சீன நாடுகளைச் சேர்ந்த சுற்றுளா பயணிகளுக்கு விசா விலக்கு அளிக்கப் இலங்கை பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
இந்தியா மற்றும் சீன நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கு விசா பெறுவதில் இருந்து விரைவில் விலக்கு அளிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் பொருட்டு, விசா பெறுவதில் இருந்து நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்கீழ் இந்தியா, சீனா, சில ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகள் ஆகியவற்றுக்கு சலுகை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளளார்.
இந்த திட்டம்குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரை கிடைத்துவுடன் விசா இல்லாத சுற்றுலா அனுமதி வழங்கப்படும் என்றும் ஜான் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் ஆறு மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு 200000-க்கு மேற்பட்டோர் சுற்றுலா சென்றுள்ளனர். அதேவேலையில் சீனாவில் இருந்து 136000 பேர் இலங்கைக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்ககது!