IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!
IRCTC உடன் மேற்கொள்ளும் இந்த வணிகத்தின் மூலம் நல்ல மாத வருமானம் கிடைக்கும்.
Best Business Plan: ஏதேனும் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். நாங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த வணிக யோசனையை வழங்க உள்ளோம். இந்த தொழிலில் நீங்கள் நிறைய சம்பாதிக்கலாம். இந்திய ரயில்வேயுடன் மேற்கொள்ளும் இந்த வணிகத்தின் மூலம் நலல் மாதம்வருமானமும் கிடைக்கும்.
மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க வாய்ப்பு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது IRCTC மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல சேவைகளை பெறலாம். இப்போது, வீட்டில் இருந்த படியே, ஐஆர்சிடிசியின் உதவியுடன் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்ட ஐஆர்சிடிசி உடன் நீங்கள் ரயில்வே டிக்கெட் முகவராக இணைந்து பணியாற்றினால், மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
ALSO READ | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!
IRCTC ஏஜெண்ட்
ரயில்வே கவூண்டரில், ரயில்வே பணியாளர்கள், டிக்கெட் வழங்குவது போல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை வழங்க, நீங்கள் IRCTC இணையதளத்திற்குச் சென்று முகவராக ஆக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராகி, வீட்டில் உட்கார்ந்து பெரிய பணம் சம்பாதிக்க முடியும். ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக நீங்கள் ஆகிவிட்டால், தட்கல், ஆர்ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ஏஜெண்டுகளுக்கு IRCTC இலிருந்து கணிசமான கமிஷன் கிடைக்கிறது.
நீங்கள் ஏஜெண்டாக, IRCTC யில் பயணிகளுக்கு ஏசி அல்லாத வகுப்பிற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 என்ற அளவிலும் , ஏசி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது டிக்கெட்டுக்கு ரூ.40 என்ற அளவிலும் கமிஷன் கிடைக்கும். இது தவிர, டிக்கெட் விலையில் ஒரு சதவிகிதமும் முகவருக்கு வழங்கப்படுகிறது.
ஐஆர்சிடிசியின் ஏஜெண்டாக புக் செய்வதில் உள்ள மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், இதில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வரம்பு இல்லை. ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். இது தவிர, தட்கல் டிக்கெட்டுகளை 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இதுமட்டுமின்றி, ஏஜென்டாக இருந்து ரயில்கள் தவிர விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவும் செய்யலாம்.
IRCTC யின் முகவராக ஆக, சில வகை கட்டணங்களையும் செலுத்த வேண்டும். ஒரு வருடத்திற்கு ஐஆர்சிடிசி ஏஜெண்ட் ஆக பணியாற்ற கட்டணம் ரூ.3999 செலுத்த வேண்டும். நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முகவராக இருக்க விரும்பினால், நீங்கள் ரூ 6999 செலுத்த வேண்டும். இது தவிர, முகவராக ஒரு மாதத்திற்கு 100 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரு டிக்கெட்டுக்கு 10 ரூபாயும், ஒரு மாதத்தில் 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரு டிக்கெட்டுக்கு 8 ரூபாயும், 300 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டிற்கு ரூ.5 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR