ரெப்போ ரேட் விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்த எஸ்பிஐ; இனி வீட்டுக்கடன்கள் மலிவு
எஸ்பிஐ கடன் விகிதத்தை 25 பிபிஎஸ் குறைப்பதால் ஜனவரி 1 முதல் வீட்டுக் கடன்களுக்கான வட்டி சிறிது குறையும்.
மும்பை: நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) மத்திய வங்கியின் ரெப்போ வீதத்துடன் இணைக்கப்பட்ட கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) 7.8 சதவீதமாகக் குறைத்து. இதன்மூலம் சிறு வணிகங்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கான கடனுக்கான வட்டி குறைத்தது. முதலில் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 8.05 சதவிகிதமாக இருந்தது.
இந்த புதிய விகிதம் ஜனவரி 1 முதல் பொருந்தும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ தனது அறிக்கையில், "புதிய வீடு வாங்க விரும்புவர்கள் 7.90% வட்டி விகிதத்தில் கடன்களைப் பெறுவார்கள். (முன்பு 8.15% ஆக இருந்தது). அதாவது 10 அடிப்படை புள்ளிகள் பிரீமியத்தில் வெளிப்புற அளவுகோல் அடிப்படையில் 7.8% கடன் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
இதுக்குறித்து பேசிய நபர், 5 அடிப்படை புள்ளிகளின் சலுகை கடன் வாங்கும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது 7.9% விகிதத்தில் கிடைக்கும். மற்ற கடன் வாங்குபவர்கள் குறைந்தது 7.95% வட்டியை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறினார்.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் பாரத ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் மற்றும் சிறு, குறு தொழில்களுக்கான கடன்களின் வட்டி விகிதம் குறையும். இதனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"இது ரியல் எஸ்டேட் சந்தைக்கு, குறிப்பாக வீட்டுவசதி பிரிவுக்கு ஒரு சாதகமான வளர்ச்சியாகும்" என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் சதீஷ் மாகர் தெரிவித்தார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது