வீடுகளுக்கே சென்று மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகிக்க மார்டி என்ற ரோபோ அறிமுகம்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய கால கட்டத்தில் மக்கள் நிற்காமல் ஓடிகொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், தகலுக்கு தேவையான பொருட்களை கூட கடைகளில் பொய் வாங்க முடியாமல் ஆன்லைனில் வாங்கிவருகின்றனர். மக்களிடையே ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது Amazon, Flipkart மட்டும் தான் என்பது பலராலும் மறுக்க முடியாத உண்மை. 


கடந்த சில வருடங்களில் ஆன்லைன் வர்த்தகம் என்பது இந்தியாவில் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் அனைவராலும் அடையாளம் காணும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இந்நிலையில், நாம் ஆன்லைனில் ஒரு பொருளை ஆடர் செய்தால் குறைந்தது 24 மணி நேரமாவது ஆகும். ஆனால், அதை விட குறைந்த நேரத்தில் மனக்கு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்றால்?. ஆமாம், நாம் நேரில் சென்றுதான் வாங்கணும். ஆனால் தற்போது நேரில் கூட செல்ல தேவை இல்லை. தேவையான பொருட்களை நமது மொபைலில் ஆடர் செய்தால் போதும் அடுத்து இருபது நிமிடத்தில் கைக்கு வந்து சேரும் என்றால் நம்ப முடிகிறதா?.  


ஆன்லைனிலோ, போன் மூலமோ பொருட்களை ஆர்டர் செய்தால் கொண்டுவரும் சேவை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் நடமாடும் மளிகைக்கடை என்ற பெயரில் ரோபோ மார்ட் என்ற புதிய நிறுவனம் பிரத்யேக சேவை ஒன்றை அறிவித்துள்ளது.


அதன் படி, 12 அடி நீளமும், 6 அடி உயரமும் கொண்ட நடமாடும் கடையை ஆப் மூலம் அழைத்தால், அது மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் பொருட்களை எடுத்து வரும். ஆப் மூலம் அதன் கதவைத் திறந்து, தேவையான பொருட்களை எடுத்துவிட்டால், மின்னஞ்சல் மூலம் அதற்கான ரசீது கிடைக்கும்.


இதில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், சூடான உணவு உள்ளிட்டவற்றை தேவைப்படும்போது அருகருகே உள்ள கடைகளுக்குச் சென்று 500 கிலோ உணவுப்பொருட்கள் வரை நிரப்பிக் கொள்ளும். முதற்கட்டமாக பாஸ்டனில் அறிமுகமாகும் இந்த சேவை தானியங்கி ரோபோ வாகனம் என்பதால், ஓட்டுநர் உதவியின்றி பொது சாலையில் பயணிக்க அனுமதி கிடைக்கவில்லை.