Ukraine: வாங்கின கடனை திருப்பி குடுக்கலை, அண்டர்வேரும் ஏலத்துக்கு போயிடும்…
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பவர்களின் உடமைகள் அனைத்தையும் ஏலம் விட்டு கடனை வசூலிக்கிறது உக்ரைன் அரசு. கடன் வாங்கியவர்களிள் நாய்கள், தனிப்பட்ட உடமைகள் மற்றும் உள்ளாடைகள் கூட ஏலம் விடப்படுகிறது.
புதுடெல்லி: சில நாடுகளில் கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. சட்டத்தை பின்பற்றாதவர்கள் மீது அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. ஆனால் உக்ரேனின் நிலைமை மிகவும் மோசம். கடன் வாங்கிய பிறகு, திருப்பிச் செலுத்தாதவர்களை எப்படியும் விட்டுவிடக்கூடாது என்ற முடிவில் அரசு செயல்படுகிறது.
அவர்களுக்கு சலுகைகளை ஏன் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்கிறது... கடன் வாங்கிய சிலர், கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தப்பித்து விடுகின்றனர். கடன் கொடுத்தவர்கள், வங்கி அதிகாரிகளும் ஏஜென்சியும் அவர்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.
கடன் வாங்கிவிட்டு கொடுக்காமல் தப்பிப்பவர்களை தண்டிக்க உக்ரைன் அரசு கடுமையான விதிகளை உருவாக்கியுள்ளது. கோவிட் -19 பரவலின் போது, உக்ரைனின் பொருளாதார நிலைமை அதிர்ச்சியூட்டும் அளவிற்கு மோசமானது.
Also Read | ICC Test rankings: அஸ்வின் டாப் -5 ஆல்ரவுண்டர், ரோஹித்-பந்த் பேட்ஸ்மேன் வரிசையில்…
உள்ளாடைகளும் ஏலம் விடப்படுகின்றன
பிபிசியின் அறிக்கையின்படி, உக்ரைனின் Kryvyi Rih மத்திய நகர் தொடர்பாக நிதியமைச்சக இணையதளத்தில் வித்தியாசமான ஏல சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் உள்ளாடையும் ஏலம் (Underwear Auction) விடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திடமிருந்து கடன் வாங்கிய ஒருவர் கடனை திருப்பி செலுத்தவில்லை. இது அவருக்கு சொந்தமானது. இந்த உள்ளாடை து 19.4 Hryvnia அதாவது 50 ரூபாய்க்கு ஏலத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பொருட்கள் நன்கொடையாக கொடுக்கப்படும்
2015 ஆம் ஆண்டில், உக்ரைனில் Setam என்ற செயல்முறை தொடங்கப்பட்டது. இதன் கீழ், இதுவரை 365 மில்லியன் யூரோக்கள் (Euro) மதிப்புள்ள சொத்துகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், அரசாங்கத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத மக்களின் பொருட்கள் விற்கப்படுகின்றன.
கடனை திருப்பி செலுத்தாதவர்களின் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படுகின்றன.
Also Read | 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு அறிவிப்பு
விலங்குகளையும் அரசு கையகப்படுத்தும்
கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் ஆடு-மாடு மற்றும் கால்நடைகளையும் அரசாங்கம் ஏலம் விடுகிறது. கொரோனா வைரஸ் காலத்தில் ஸில், உக்ரைனில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த நபர்கள் தற்போது கடன்களை செலுத்த முடியவில்லை.
கடன்களை வசூலிக்க உக்ரேனில் (Ukraine) கடுமையான சட்டங்கள் (Strict Laws) இயற்றப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலால் உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டது. பொருளாதார (Economy) நிலைமை மோசமடைந்து, வாழ்வதற்கே வழியில்லாமல, பலர் கடன் வாங்கியுள்ளனர்.
வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கம் அவர்களின் உடமைகள் அனைத்தையும் ஏலம் விட்டு கடனை (Loan) வசூலிக்கிறது. கடன் வாங்கியவர்கள் நாய்கள் மற்றும் தனிப்பட்ட உடமைகள் மற்றும் உள்ளாடைகள் (Underwear Auction) கூட ஏலம் விடப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், ஒரு வயதான பெண்ணின் இரண்டு நாய்கள் ஏலம் விடப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
Also Read | IPL auctions: தோனி முதல் யுவராஜ் வரை IPL ஏலங்களில் அதிக விலை போனவர்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR