ஆரோக்கியமான தூக்கம் உடலுக்கு நல்லது. நோய் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் தினசரி 8 மணி நேர தூக்கம் அவசியம். ஒருவேளை தூக்கப் பிரச்சனைகள் இருக்கிறது என உங்களுக்கு தெரிந்தால், அதற்கு ஏற்ற உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள். சரியான உணவுமுறைகூட தூக்கப் பிரச்சனைகளை சரி செய்துவிடும். தூக்கம் மட்டும் ஒருவருக்கு சரியாக இல்லை என்றால் செரிமான பிரச்சனை, வாயு தொல்லை, குடல் பிரச்சனைகள் என வரிசையாக வர தொடங்கும். நாளடைவில் நாட்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதனால், சரியான தூக்கம் வர எந்தெந்த உணவு வகைகளை தேர்வு செய்து சாப்பிடலாம் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கமின்மையால் வரும் பிரச்சனைகள்


தூக்கம் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கத்தின் போது, உடல் தன்னைத் தானே சரிசெய்து கொள்கிறது. மேலும் நினைவுகளைச் செயலாக்கிச் சேமிக்க மூளை செயல்படுகிறது. தூக்கமின்மை அல்லது மோசமான தூக்கத்தின் தரம் சோம்பல், சோர்வு, எரிச்சல், கரோனரி நோய், இதய நோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


மேலும் படிக்க | தலைமுடி வளர்ச்சிக்கு எது நல்லது...? நெல்லிக்காய் ஜூஸ் vs கற்றாழை ஜூஸ் - நன்மைகள் இதோ


கோலின் என்றால் என்ன?


சாதாரண உடல் செயல்பாடுகளுக்கு கோலின் தேவைப்படுகிறது, இது உங்கள் கல்லீரலில் இருந்து சிறிய அளவில் வெளியிடப்படுகிறது, இது நரம்பு மண்டலம், வளர்சிதை மாற்றம், மூளை வளர்ச்சி மற்றும் தசை இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. மேலும், தூக்கத்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட்டால் தூக்கம் வரும். 


தூக்கத்திற்கு உதவும் உணவுகள் : 


1. பப்பாளி


பப்பாளி பொதுவாக நல்ல செரிமானத்திற்காக உண்ணப்படுகிறது. இது செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவும், அதாவது குடல் இயக்கத்துக்கு தேவையான ஆற்றலையும், நச்சுகளை வெளியேற்றவும் முக்கிய பங்களிக்கும். இந்தப் பழத்தை உண்பதன் மூலம் உடலில் கோலின் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.


2. முட்டை


முட்டைகள் கோலினின் வளமான ஆதாரமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக மஞ்சள் கருவை நீங்கள் சாப்பிட்டால், இந்த ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கும். மேலும், உங்கள் தூக்கமும் நன்றாக இருக்கும். ஒரு பெரிய முட்டையில் சுமார் 147 மி.கி கோலின் உள்ளது.


3. கோழி


கோழி இறைச்சியானது புரதத்தைப் பெறுவதற்காக உண்ணப்படுகிறது, இது உடலை வலிமையாக்குகிறது. ஆனால் நீங்கள் அதை குறைந்த அளவில் சாப்பிட வேண்டும். 100 கிராம் வேகவைத்த கோழியில் 73 மில்லிகிராம் கோலின் உள்ளது. இது தூக்கத்துக்கு வித்திடும்.


மேலும் படிக்க | அரிசியில் இது போன்ற பூச்சிகள் வராமல் தடுப்பது எப்படி? எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ