தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டை பெட்டியை மாட்டி விட்ட கல்லூரி..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பள்ளி, கல்லூரிகளில் காலம் காலமாகவே ஆசியர்களுக்கு இருக்கும் பேரும் பிரச்சனைகளில் ஒன்று தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதை எப்படித் தடுப்பது என தீவிரமாக யோசித்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் கல்லூரி, மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க ஒரு புதிய தனித்துவமான நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று, மாணவர்கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க, தலையில் அட்டைப்பெட்டியை வைத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் உள்ள தனியார் பல்கலை ஒன்றில் நடக்கும் செமஸ்டர் தேர்வில், முறைகேடுகளை தடுக்கவும், மாணவர்கள் காப்பி அடிக்காமல் இருக்கவும் மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியை மாட்டி தேர்வு எழுத வைத்துள்ளனர்.



இது தொடர்பான புகைப்படத்தை மாணவர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது. இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மீண்டும் இவ்வாறு நடந்தால் கல்லூரி உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தின் பகத் முன் பல்கலைக்கழக கல்லூரியில் நடந்துள்ளது.