June 10th: மதுரையின் மைந்தன் சுந்தர் பிச்சையின் பிறந்த நாள் இன்று
மதுரையில் பிறந்து, சென்னையில் வளர்ந்து, உலக தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையின் பிறந்தநாள் இன்று
மதுரை மண்ணின் மைந்தன் தற்போது உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றின் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். கூகுள் (Google) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.
அவருடைய பிறந்தநாள் இன்று. ரகுநாத பிச்சை - லட்சுமி தம்பதிகளுக்கு மகனாக மதுரையில் பிறந்த இவர் சென்னையில் பள்ளிப் படிப்பு, ஐ.ஐ.டி கரக்பூர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளி என தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டார்.
சுந்தர் பிச்சை படிப்பில் மட்டும் சுட்டி அல்ல, விளையாட்டிலும் கெட்டி. பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு தலைமை தாங்கியவர்.
2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவரது மேற்பார்வையின் கீழ், கூகுளின் இணைய உலவியான க்ரோம், மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஆகியவை உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | World Record on Child Birth: ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்ற மகராசி
கூகுள் நிறுவனத்திற்கு வருமானத்தைப் பெற்றுத் தரும் கூகுள் தேடல் (Google Search), விளம்பரம், கூகுள் மேப் (Google Map) மற்றும் யூ டியூப் உள்ளிட்ட தயாரிப்புகளிலும் சுந்தரின் பங்களிப்பு கணிசமானது. 2015ல் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவியேற்றார் சுந்தர் பிச்சை.
அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயரதிகாரி சுந்தர் பிச்சை என்று கூறப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், சுந்தர் பிச்சையின் அடிப்படை சம்பளம் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது சுமார் 15 கோடி ரூபாய். அடிப்படை சம்பளத்தைத் தவிர, இதர கொடுப்பனவுகளாக 5 மில்லியன் டாலர் (சுமார் 37 கோடி ரூபாய்) பெறுகிறார். அதாவது அவருடைய மொத்த சம்பளம் சுமார் 52 கோடி ரூபாய்.
ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியான பிறகு, அவருடைய சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகிலேயே ஒரு தனி நபர், ஒரு உயரதிகாரி பெறும் அதிகபட்ச சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மதுரை தமிழரே!
Also Read | Rare Gold Coin: ஒரு தங்க நாணயத்தின் விலை 138 கோடி ரூபாயா? Too much!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR