Google Photos: கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை, கட்டண விவரங்கள்

குறைந்தபட்சம் 130 ரூபாய் கட்டணம் கொடுத்து கூகுள் போட்டோஸில் உங்கள் புகைப்படங்களை இனி சேமிக்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2021, 02:38 PM IST
  • கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை
  • கட்டண விவரங்கள்
  • இதுவரை, நான்கு டிரில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் கூகுள் போட்டோஸ்-இல் சேமிக்கப்பட்டுள்ளன
Google Photos: கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை, கட்டண விவரங்கள் title=

கூகுள் போட்டோஸ் இனி இலவசம் இல்லை. மூன்று விதமான கட்டணத் திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் 130 ரூபாய் கட்டணம் கொடுத்து கூகுள் போட்டோஸில் உங்கள் புகைப்படங்களை இனி சேமிக்கலாம்.

2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கூகுள் போட்டோஸ் (Google Photos) பிரபலமானது. இதுவரை, நான்கு டிரில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் கூகுள் போட்டோஸ்-இல் சேமிக்கப்பட்டுள்ளன,

வாரந்தோறும் 28 பில்லியன் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த இலவச சேவை கூகுளின் இயந்திர கற்றல் வழிமுறைகளை மேம்படுத்த உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | BOMB THREAT: நடிகர் அஜீத்தின் சென்னை வீட்டில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு 

இனிமேல், கூகுள் போட்டோஸில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 15 ஜிபி ஒதுக்கீடு என்ற வரம்பைத் தாண்டினால், உங்களின் சேமிப்பக தேவைக்கு கூகுக்ள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கும். இந்த புதிய மாற்றம் இன்று (ஜூன் 1, 2021) முதல் நடைமுறைக்கு வருகிறது.  

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google), ஜிமெயில் பயனர்களுக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. Google நிறுவனம் இப்போது இந்தியாவில் கூகுள் ஒன் சேவையை (Google One service) அறிமுகப்படுத்தியுள்ளது.  இனிமேல் அதன் சேவைகளுக்குகட்டணம் செலுத்தவேண்டும்.

கூகுளின் ஜிமெயில் (Gmail) சேவையை பயன்படுத்தும் அனைவரும் இதுவரை கூகுள் போட்டோஸில், தங்கள் புகைப்படங்களை  இலவசமாக சேமித்து வைக்க முடிந்தது. ஒவ்வொரு மாதமும், எக்ஸ்பிரஸ் தரம் அல்லது உயர் தரமான வரம்பற்ற புகைப்படங்களை Google போட்டோஸ் (Google Photos)இல்  பதிவேற்றி சேமித்து வைக்க முடிந்தது.

Also Read | சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?

கூகுள் ஒன் (Google One) திட்டத்தின் கீழ் அடிப்படை சேமிப்பு திட்டம் மாதம் 130 ரூபாய். ஒவ்வொரு மாதமும் 130 ரூபாய் கொடுத்தால், 100 ஜிபி cloud space அளவிலான புகைப்படங்களை சேமிக்கலாம். அதோடு, Google நிபுணர்களிடமிருந்து தேவையான ஆதரவைப் பெறலாம். இந்த சேவையில் குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்கலாம் அல்லது கூடுதல் உறுப்பினர்களைச் சேர்க்க முடியும். 100 ஜிபி அளவிலான திட்டத்தை ஓராண்டுக்குக் எடுத்தால், 1300 ரூபாய் செலுத்த வேண்டும். 

மாதத்திற்கு 210 ரூபாய் செலுத்தும் திட்டமும் உண்டு. இதில் உங்களுக்கு. 200 ஜிபி அளவிலான கிளவுட் ஸ்டோரேஜ் பெறுவீர்கள். ஆண்டுக்கு இந்தத் திட்டத்தை எடுத்துக் கொண்டால் 2,100 ரூபாய் செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்திலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது நீங்கள் உங்கள் சேமிப்பகத்தை பிரித்துக் கொடுக்கலாம்.  

Also Read | தனுஷின் ‘ஜகமே தந்திரம்’; நாளை வெளியாகிறது ட்ரைலர்..!!

மூன்றாவது திட்டம் 2TB சேமிப்பு. மாதந்தோறும் 650 ரூபாய் என்றும், ஓராண்டுக்கு என்றால் 6,500 ரூபாய் செலுத்தும் திட்டம் இது.  இதிலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சேமிப்பகத்தை பிரித்துக் கொடுக்கலாம்.

கூகுளின் பிக்சல் போன் பயனர்களுக்கு இந்த கட்டணம் வசூலிக்கப்படாது. ஜூன் 1 க்குப் பிறகும் தங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கள் சாதனங்களிலிருந்து பதிவேற்ற முடியும்.
 
வரம்பற்ற படங்களையும் வீடியோக்களையும் இலவசமாகக் காப்புப் பிரதி எடுக்க இதுவரை இலவசமாக இருந்த சேவை இப்போது கட்டண சேவையாகிறது. உங்கள் சேமிப்பகத்தை  மொபைல், டேப்லெட் அல்லது கணினியிலிருந்து அணுகலாம். photos.google.com என்ற இணையதளத்தில் உங்கள் படங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாக இருக்கும்.

Also Read | Corona சிகிச்சைக்காக Rs 5 லட்சம் ரூபாய் வரையில் கடன் கொடுக்கும் வங்கி எது? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News