ஆபாச பட நடிகையாக இருந்த தற்போது பிரபல மாடலாகவும், பாலிவுட் நடிகையாகவும் திகழ்பவர் சன்னி லியோன். இவருக்கு சமீபத்தில்தான் 42 வயது ஆனாது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வீடி, வேலை என அனைத்தையும் தாண்டி தன் சரும அழகையும் மினுமினுப்பான தேகத்தையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார் சன்னி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன்னி லியோன்: 


ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் சன்னி லியோன். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்னர் அது போன்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிறகு இவரது இமேஜ் மொத்தமாக மாறியது. அதுவரை இவரை வெறும் உடலாக மட்டுமே பார்த்து வந்த மக்கள், அதன் பிறகு இவருக்குள் இருக்கும் மனதையும் பார்த்தனர். இதையடுத்து இவருக்கு சில பாலிவுட் பட வாாய்ப்புகளும் குவிந்தன. இவர், சமீபத்தில் தமிழ் மொழியில் வெளிவந்திருந்த ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தில் பேயாக நடித்திருந்தார். இத்தனை வயதிலும் இவர் தனது தேகத்தில் இளமையும் முகத்தில் அழகும் குறையாமல் இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா..? 


மேலும் படிக்க | அனுஷ்காவின் பளபள தேகத்திற்கு இதுதான் காரணமா..? வெளியானது ஸ்கின் கேர் சீக்ரட்!


சரும பராமரிப்பிற்கான டிப்ஸ்:


>சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தமாக கூறுகிறார் சன்னி லியோன். 


>இரவில் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் கண்டிப்பாக முகத்தை கழுவிய பிறகுதான் தூங்க செல்ல வேண்டும் என்பது சன்னி லியோனின் பரிந்துரை. 


>முகத்தில் வரும் பருக்களை தவிர்க்க கற்றாழை சாற்றை பரிந்துறைக்கிறார் சன்னி லியோன். இது, முகத்தில் உள்ள சருமத்தில் பிளவு ஏற்படாமல் தவிர்க்கும் என்றும் சரும அழகை பாதுகாக்க உதவும் என்றும் கூறுகிறார். 


>கண்டிப்பாக ஒரு கற்றாழை செடியை வீட்டில் வளர்க்க வேண்டும் என்று கூறும் அவர் அதில் உள்ள சாற்றை முகத்தில் தடவி 5-10 நிமிடங்கள் வரை உலர விட வேண்டும் என்று தெரிவிக்கிறார். 


>30-40 வயதுடைய பெண்கள் கண்டிப்பாக சரும வறட்சியை தவிர்ப்பதில் கவனம் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் சன்னி  லியோன். 


>சரும வறட்சியை தவிர்க்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் வெயிலில் செல்வதற்கு முன்னர் சன்ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். 


ஸ்கின் கேர் சிக்ரெட்: 


சன்னி லியோன் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சரும அழகின் ரகசியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், தன் சருமத்தை எப்போதும் நன்றாக பராமரிப்பதுதான் அதற்கான ரகசியம் என்று கூறினார். மேலும், அவர் அதிகம் அமிலம் கலக்காத அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதாக கூறினார். பெண்கள், தங்கள் சருமத்திற்கு எது செட் ஆகுமோ அந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் பிராண்ட் மற்றும் கவர்ச்சிகரமான பெயரை நம்பி அதனை உபயோகிக்க கூடாது என்றும் கூறினார். பலர் கூறுகின்றனர் என்பதற்காக ஒரு பொருளை தேர்வு செய்ய கூடாது என்றும், சருமத்திற்கு எது ஏதுவாக இருக்கிறதோ அதையே உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 


மருத்துவரின் பரிந்துரை: 


பல பொருட்களை முகத்தில் தடவி சருமத்தை வீண் செய்வதை விட, தோல் நோய் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு, அவர் பரிந்துரைக்கும் பொருட்களை உபயோகிக்கலாம் என்கிறார் சன்னி லியோன். இவ்வாறு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஏதோ ஒரு பொருளை உபயோகப்படுத்தி விட்டு பின்னர் அவதிப்படும் பலரை தான் பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர். ஒரு பொருள் தன் சருமத்திற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அதை கண்டிப்பாக மருத்துவரின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பதையும் வேண்டுகோளாக வைக்கிறார் சன்னி லியோன். 


மேலும் படிக்க | 60 வயதில் ரூ.10 கோடி கையில் இருக்கும்... சில முதலீட்டு டிப்ஸ் ஒதோ..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ