சூப்பர் பிங்க் மூன் 2020: இந்த அதிசய நிகழ்வை நாம் எப்போது பார்க்கலாம்...
அடுத்த வாரத்தில் பிங்க் நிலவு, சூப்பர் நிலவும் என பல பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது!!
அடுத்த வாரத்தில் பிங்க் நிலவு, சூப்பர் நிலவும் என பல பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது!!
சூப்பர் மூன் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஏப்ரல் 8 அன்று அதிகாலை 2:35 மணிக்கு GMT (காலை 8:05 IST), கொரோனா வைரஸ் தோற்றுக்கு மத்தியில் சூப்பர் பிங்க் மூனின் வான நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
ஏப்ரல் 8 அன்று அதிகாலை 2:35 மணிக்கு, 356,907 கி.மீ தூரத்தில் பூமிக்கு மிக அருகில் இருப்பதால், புவி மற்றும் சந்திரனுக்கு இடையேயான சராசரி தூரம் 384,400 கி.மீ ஆக இருக்கும்.
சந்திரனின் அளவில் வியத்தகு அதிகரிப்பு இருப்பதை நீங்கள் காண முடியும், இது சராசரி நாளை விட 30 சதவீதம் பெரியதாக தோன்றும். நாட்டின் சூப்பர்மூன் ஆர்வலர்கள் இந்த நிகழ்வை ஆன்லைனில் நேரடியாக ஒளிபரப்புவதை பார்க்கலாம்.
இந்தியாவில் சூப்பர் பிங்க் மூன் காலை 8:05 மணிக்கு தோன்றும் என்பதால், இந்த நிகழ்வை ஆன்லைனில் பார்க்கலாம். ஸ்லோ தொலை நோக்கி அதன் யூ-டியூப் (YouTube) சேனலில் வரவிருக்கும் சூப்பர் மூனை நேரடியாக ஒளிபரப்பும்.
CNET அறிக்கையின்படி, ஏப்ரல் 8 சூப்பர்மூன் இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் பிரகாசமான சூப்பர்மூனாக இருக்கும். 'பிங்க் மூன்' என்ற பெயர் வட அமெரிக்காவின் கிழக்கில் வசந்த காலத்தில் பூக்கும் இளஞ்சிவப்பு பூவை (Phlox subulata) குறிக்கிறது. எனவே, இது சந்திரனின் நிறத்துடன் தொடர்புடையது அல்ல.
கடைசி சூப்பர்மூன் - “சூப்பர் வார்ம் மூன்” - மார்ச் 9, 2020 அன்று காணப்பட்டது. சூப்பர்மூன்கள் தொடர்பான பிற தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
பிப்ரவரி 8: “சூப்பர் ஸ்னோ மூன்”
மார்ச் 9: “சூப்பர் வார்ம் மூன்”
ஆப்ரில் 8: “சூப்பர் பிங்க் மூன்”
மே 7: “சூப்பர் ஃப்ளவர் மூன்”
குறிப்பிடத்தக்க வகையில், பூமிக்கு ஒரு சந்திரன் மட்டுமே உள்ளது, இது அதன் அளவின் கால் பகுதியும் சராசரியாக 238,855 மைல்களும் தொலைவில் உள்ளது. நமது கிரகத்தைச் சுற்றி 27 நாள் சுற்றுப்பாதையை கண்டுபிடிக்கும் போது சந்திரனை நம் இரவில் நம் வெறும் கண்ணால் பார்க்க முடியும்.