திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பக்தி பெருக்குடன் நடைபெற்று வரும் கந்தசஷ்டி விழாவின்போது, முருகனுக்கு பலரும் பலவிதமான காணிக்கைகளையும், வேண்டுதல்களையும் நிறைவேற்றுவது வழக்கம். நேற்று திருச்செந்தூருக்கு தந்து குடும்பத்தினருடன் வந்த சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம் சாமி தரிசனம் செய்தார். அவர்  33¾ பவுன் தங்க சங்கிலியை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக வழங்கினார்.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்க சங்கிலியுடன் கூடிய டாலரில், ஒருபுறம் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டிருந்தது. டாலரின் மறுபுறம், ஓம் சரவணபவ என முருகனின் நாமம் பொறிக்கப்பட்டு இருந்தது.  சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம் வழங்கிய 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆபரணத்தை கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.


வழக்கமாக தீபாவளிக்கு அடுத்த நாள் தொடங்கி ஆறு நாட்களும் முருகனின் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த பழக்கதின் அடிப்படையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4ஆம் தேதியன்று, யாகசாலை பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக தொடங்கியது.  


சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதணை நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினமும் தனது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டு, 33¾ பவுன் தங்க சங்கிலியை ஜெயந்திநாதருக்கு காணிக்கையாக வழங்கினார்.


Also Read | பழநி முருகன்-பூம்பாறை வேலப்பர் நவபாஷண சிலைகளின் வித்தியாசம்


கந்தசஷ்டி விழாவின் மூன்றாம் நாளான நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. உற்சவ மூர்த்தியான சுவாமி ஜெயந்திநாதர், தனது மனைவியர்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். 


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கோவிலுக்கு முதலில் வந்த 5 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களும் கடவுளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.


கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், சஷ்டித் திருநாளான செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும். கொரோனாவிற்கு பிறகு, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹார நிகழ்ச்சி எளிமையாக நடைபெறுகிறது.  


ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR