இன்று காளி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கபட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடுவது வழக்கம். அதன்பின் நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.


பொதுவாக திருப்பதியில் மார்கழி மாதத்தில் மட்டும் சுப்ரபாதத்துக்கு பதிலாக ஆண்டாள் எழுதிப் பாடிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். அதன்படி கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி முதல் திருமலையில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. நேற்று போகி பண்டிகையுடன் மார்கழி மாதம் நிறைவு பெற்றது. 


இந்நிலையில் இன்று 15-ஆம் தேதி (தை 1-ஆம் தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கபட்டுள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.