Surya Rashi Parivaryan 2021: வெற்றி, நம்பிக்கை, ஆரோக்கியம் தரும் சூரியன், இன்று (நவம்பர் 16, 2021, செவ்வாய்கிழமை) ராசியை (Sun Transit) மாற்றப் போகிறார். அதன்படி சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்து அடுத்த ஒரு மாதம் வரை இருப்பார்.  தற்போது விருச்சிகத்தின் சூரியன் அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால் இந்த குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மட்டும் எவ்வித தாக்கமும் ஏற்படாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் இந்த ராசிக்காரர்கள் (Rasipalan) தொழில் வெற்றியைப் பெறுவார்கள், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஒரு மாதத்திற்கு சூரியன் (Sun Transit) அருளைப் பொழியும் அந்த 5 ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்


இந்த 5 ராசிக்காரர்களின் தொழில் பிரகாசமாக இருக்கும்


ரிஷபம்: ரிஷப ராசியினருக்கு சூரியன் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தொழில்-வியாபாரத்தில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் சிலரின் கனவுகள் நிறைவேறும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் கடின உழைப்பின் முழு பலனைத் தரும். வேலையில் இருப்பவர்களைத் தவிர, மாணவர்களும் சிறப்பான வெற்றியைப் பெறலாம். வெளியே செல்லும் கனவு நனவாகும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடு நல்ல பலனைத் தரும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் ஆசியால் நன்மை அடைவார்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். மரியாதை அதிகரிக்கும். சொத்து வாங்கலாம் அல்லது மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். எதிர்பாராத பயணம் ஏற்படலாம். தடைபட்ட பணிகள் தற்போது முடிவடையும். மொத்தத்தில் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நம்பிக்கை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செயல்பாடுகள் அதிகரிக்கும், நல்ல பலன்களும் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தையுடனான உறவு வலுவாக இருக்கும்.


மகரம்: விருச்சிக ராசிக்காரர்களின் சூரியன், மகர ராசிக்காரர்களுக்கு தொழில், ஆரோக்கியம், நிதி நிலையில் மிகச் சிறந்த பலன்களைத் தருவார். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். அரசுத் துறையுடன் தொடர்புடையவர்கள் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். குடும்பத்தினரின் உதவியால் தடைபட்ட வேலைகள் முடிவடையும்.


ALSO RRAD | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR