முதலில் சுசிகணேசன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக லீனா மணிமேகலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தனது முகப்புத்தகத்தின் வாயிலாக விளக்கம் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த லீனை மணிமேகலை கூறியது, இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் இயக்குயர் சுசி கணேசனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது. செயற்பாட்டாளராக பயணிக்கும் நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. சுசி கணேசன் மூலம் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து உண்மையை தெரிவிக்க வேண்டும். மேலும் மூத்த நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்கள் மெளனம் காப்பது குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக அமைகிறது எனவும் கூறினார்.


இதனையடுத்து சுசிகணேசன், சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் பொய்யான புகாரை கூறிவருவதாக லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "சுசிகணேசன் வயது முதிர்ந்த என் தந்தையை போன் செய்து, உன் மகன் லீனா மணிமேகலைக்கு ஆதராவாக நின்றாள் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். இந்த நேரத்தில் அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்...... நான் லீனா மணிமேகலைக்கு ஆதராவாக நிற்ப்பேன். தைரியத்துடன் வலுவாக போராடுங்கள் சகோதரி" எனக் கூறியுள்ளார்.