கொரோனா எனும் கொடும் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. ஒருபுறம் நோயால் மக்கள் அவதிப்பட, மறுபுறம் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பணிச்சுமை அதிகரித்துவிட்டது. வழக்கத்தை விட அதிக நேரம் பணியாற்றி, மனித குலத்திற்கே சேவையாற்றி வருகின்றனர் முன்களப் பணியாளர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சூழ்நிலையில், தாஜ்சாட்ஸ் ஏர் கேட்டரிங். இந்தியாவின் ஒன்பது நகரங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு தயாரித்து வழங்குகிறது.



விருந்தோம்பல் துறையில் பிரபல நிறுவனமான தாஜ்சாட்ஸ் ஏர் கேட்டரிங் (TAJSATS AIR CATERING) விமானங்களில் உணவு வழங்கும் பணியில் அனுபவமுள்ள நிறுவனம். பல தசாப்த காலங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் TAJSATS AIR CATERING தற்போதைய சூழ்நிலையில் தனது திறமையை சுகாதார பணியாளர்களுக்காக மடைமாற்றி விட்டிருக்கிறது.


Also Read | Earthquake: நேபாளத்தில் போகாராவின் கிழக்கே 5.3 அளவிலான நிலநடுக்கம் 
 
தாஜ் சாட்ஸ், World Central Kitchen (WCK) என்ற அமைப்புடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. 9 முக்கிய நகரங்களில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு வழங்குகிறது


"நாங்கள் நாளொன்றுக்கு 17,000-18,000 மருத்துவ ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு உணவை வழங்குகிறோம். சிறிய பகுதிகளுக்கும் உணவு விநியோகம் செய்ய முயற்சிக்கிறோம். முதல்கட்டமாக, வாரணாசியில் எங்கள் சேவையை தொடங்கியுள்ளோம்" என்று தாஜ் சாட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். 


Also Read | உடலை பொன்னிறமாக்கும் பொன்னாங்கண்ணி கண்களுக்கு ஒளியூட்டும்


இயற்கை பேரழிவுகளின்போது மக்களுக்கு  உணவு வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட லாப நோக்கற்ற, அரசு சாரா அமைப்பு World Central Kitchen (WCK) ஆகும்.  2010ஆம் ஆண்டில் பிரபல சமையல்காரர் ஜோஸ் ஆண்ட்ரேஸால் (celebrity chef José Andrés) இந்த அமைப்பு நிறுவப்பட்டது.


இயற்கை பேரழிகளின்போது, மக்களின் உடனடி பிரச்சனையான பசி பிரச்சினையைத் தீர்க்க உள்ளூர் சமையல்காரர்களுடன் ஒத்துழைத்து செயல்படுகிறது World Central Kitchen.


Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR