மேஷம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு செய்யவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் அவ்வப்போது சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.


ரிஷபம்


வீடு மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் இருப்பவர்களுக்கு லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நறுமணப்பொருட்கள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதில் தன்னம்பிக்கையும், நம்பிக்கையும் மேம்படும்.


மிதுனம்


சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த செயல்கள் நடைபெறும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும்.


கடகம்


மனதில் புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத ஆதரவின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் தொடர்பான முயற்சிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் உதவிகள் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வாகனப் பயணங்களின்போது விதிகளை மதித்து நடப்பது சிறப்பாகும்.


சிம்மம்


மனதில் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். மற்றவர்களை குறை சொல்லும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். மற்றவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.


கன்னி


மனதில் இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். கோபமான பேச்சுக்களை குறைத்துக்கொள்ளவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.


துலாம்


குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். புதிய ஆடைகள் மற்றும் பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும்.


விருச்சகம்


வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


தனுசு


வாழ்க்கைத்துணைவருடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான கல்விகளில் முன்னேற்றமான சூழ்நிலைகளும், அலைச்சல்களும் உண்டாகும்.


மகரம்
மூத்த உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். மருத்துவம் தொடர்பான செலவுகள் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோக பணிகளில் ஏற்படும் பொறுப்புகளால் காலம் தவறி உணவு உண்ண வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையை அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை உண்டாகும்.


கும்பம்
பொதுப்பணி தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஒப்பந்தம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். பயணங்களில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சர்வதேச வணிகம் தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். பழகும் தன்மையில் மாற்றங்கள் ஏற்படும்.


மீனம்


கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத உதவிகளும், பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் உழைப்பிற்கேற்ப முன்னேற்றம் ஏற்படும்.