Tamil Horoscope 07 July 2021: இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி இருக்கும்
இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம். சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஒரு கலை...
இன்றைய நாளுக்கான உங்கள் ராசிபலன் எப்படி உள்ளது? உங்கள் அதிர்ஷ்ட எண், நிறம் என்ன? இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது அவசியமாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.
ரிஷபம்:
மாணவர்கள் கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெற்று முடிவு செய்வது நல்லது. எதிர்பார்த்த சில காரியங்கள் நிறைவேறும். சாமர்த்தியமாக செயல்பட்டு மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மிதுனம்:
அனுபவப்பூர்வமான முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த தனவரவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும்.
கடகம்:
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் சார்ந்த வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
ALSO READ | Spiritual News: திதிகளும் , அந்த திதிகளில் செய்வதற்கு உகந்த பணிகளும்
சிம்மம்:
மனதில் இருந்துவந்த கவலைகள் குறைந்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமும், லாபமும் உண்டாகும்.
கன்னி:
உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். சுபகாரியங்களை முன்னின்று செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. தந்தைவழி வியாபாரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும்.
துலாம்:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமையும், புரிதலும் மேம்படும். எண்ணிய காரியங்களை சிறு சிறு தடைகளுக்கு பின்பு திட்டமிட்ட விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புதிய புரிதலும், கண்ணோட்டங்களும் உண்டாகும்.
விருச்சகம்:
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ALSO READ | சில தெய்வங்களுக்கு அர்பணிக்க கூடாத சில மலர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்
தனுசு:
கலைத்துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். சிந்தித்து தெளிவான முடிவுகளை எடுப்பதன் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் அதிகரிக்கும்.
மகரம்:
மனதில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். குழந்தைகள் உங்களின் ஆலோசனைகளின்றி தங்களின் விருப்பத்திற்கு தகுந்தாற்போல் செயல்படுவார்கள். நெருக்கமானவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது மேன்மையை ஏற்படுத்தும்.
கும்பம்:
வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும்.
மீனம்:
திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நடைபெறும். வழக்கு தொடர்பான விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அவ்வப்போது மனதில் இனம்புரியாத சிறு சிறு கவலைகளும், பயமும் ஏற்பட்டு நீங்கும்.
Also Read | வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR