Silver: வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு நல்லதா? அறிவியல் சொல்வது என்ன?

என் குழந்தைக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தான் உணவு கொடுக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் பெற்றோர்களில் நீங்கள் ஒருவரா? நீங்கள் கட்டாயம் இந்த கட்டுரையைப் படிக்கவும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 17, 2021, 04:58 PM IST
  • வெள்ளிப் பாத்திரத்தில் வைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதா?
  • இல்லை என்கிறது அறிவியல்
  • வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால், நன்மையும் இல்லை, தீமையும் இல்லை
Silver: வெள்ளிப் பாத்திரங்களில் வைத்த உணவை கொடுப்பது குழந்தைக்கு  நல்லதா? அறிவியல் சொல்வது என்ன? title=

என் குழந்தைக்கு வெள்ளிப் பாத்திரத்தில் தான் உணவு கொடுக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் பெற்றோர்களில் நீங்கள் ஒருவரா? நீங்கள் கட்டாயம் இந்த கட்டுரையைப் படிக்கவும்.

புதிதாக பிறந்த குழந்தைக்கு முதலில் திட உணவை ஊட்டும் நிகழ்ச்சியை மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதும் பாராம்பரியத்தைக் கொண்டது இந்தியா. இதற்காக, பலர் பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் சென்று சடங்காகவே (annaprashan) நடத்துவார்கள்.

அப்போது வெள்ளி கிண்ணம், ஸ்பூன், கிளாஸ் ஆகியவற்றை வாங்குவதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அதாவது குழந்தைக்கு வெள்ளியால் உருவாக்கப்பட்ட பொருட்களில் வைத்த உணவை கொடுப்பது ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில்தான் இந்த வழக்கம், பழக்கமாகியிருக்கிறது.

Also Read | Cooking Tips: சுவையான காக்டெய்ல் பிரியாணி செய்யும் சமையல் குறிப்பு

ஆனால், அறிவியல் சொல்வது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். உங்கள் குழந்தைக்கு வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தி உணவு ஊட்டுவதால் எந்த சுகாதார நன்மைகளும் இல்லை. அதேபோல, உங்கள் குழந்தைக்கு வெள்ளி பாத்திரத்தில் உணவு கொடுப்பதால் எந்த கெடுதலும் இல்லை.

வெள்ளிப் பாத்திரத்தில் வைக்கப்படும் உணவு ஆரோக்கியமானதாக மாறிவிடும் என்று பலர் நம்புகிறார்கள், ஆனால் எந்தவொரு கனிமங்களும் ஊட்டச்சத்துக்களும் வெள்ளிப் பொருட்களிலிருந்து உங்கள் குழந்தை உட்கொள்ளும் உணவு அல்லது தண்ணீருக்குள் செல்கின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கால்சியம், இரும்பு போல உதாரணமாக போலல்லாமல், வெள்ளி உடலுக்கு அவசியமான ஊட்டச்சத்து அல்ல. வெள்ளியை நமது உடல் கிரகிப்பதில்லை. உட்கொண்டபோதும் உடலால் உறிஞ்சப்படுவதில்லை. ஆனால், ஈயம் மற்றும் பாதரசம் போன்ற பிற உலோகங்களைப் போல வெள்ளி உடலுக்கு தீங்கும் விளைவிப்பதில்லை.

Also Read | தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

கடந்த காலத்தில், மருத்துவ பயன்பாடுகளிலும் வெள்ளி பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது.  அதேபோல், இனிப்பு போன்ற சில முக்கிய பதார்த்தங்களிலும் வெள்ளியினால் உருவாக்கப்பட்ட மெல்லிய இழை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும். அதற்கு காரணம் வெள்ளி உடலுக்கு தீங்கு விளைப்பதில்லை என்பதே.  

வெள்ளிப் பாத்திரத்தை (utensils) பயன்படுத்தி குழந்தைக்கு உணவூட்டுபவர்கள், தக்காளி அல்லது சில புளிப்பு பழங்கள் வெள்ளியில் வைத்தால் அது எதிர்வினைபுரியக்கூடும் என்று கவலைப்படுகிறார்கள். இதுவும் உண்மையல்ல. 

ஆனால், முட்டை போன்ற சில உணவுகளில் இருக்கும் கந்தகத்திற்கு வெள்ளி எதிர்வினைபுரியும். இது தீங்கு விளைவிக்கவில்லை என்றாலும், இது ஒரு விரும்பத்தகாத சுவையை ஏற்படுத்தும். எனவே, உங்கள் குழந்தைக்கு முட்டை கொடுக்கும்போது மட்டும் வெள்ளிப் பாத்திரத்தை தவிர்க்கலாம்.  

Also Read | சகோதரிகளை ஒரே மேடையில் திருமணம் செய்த மணமகனுக்கு மாமியார் வீட்டில் களி

நாளடைவில் வெள்ளி பாத்திரங்கள் கருத்துப் போவதை (tarnished) பார்த்திருக்கலாம். நீங்கள் கவனிக்கலாம், காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடு (hydrogen sulphide) வெள்ளியில் ஏற்படுத்தும் எதிர்வினையே இதற்கு காரணம். இது இயல்பானது மற்றும் வெள்ளிப் பொருட்கள் கருத்துப் போவதால் ஆரோக்கியத்திற்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.  

அனைவரும் சாதாரண பாத்திரங்களை பயன்படுத்தும்போது, வெள்ளிப் பாத்திரங்களை பயன்படுத்துவது என்பது, மற்றவர்களை விட நான் ஒருபடி உயர்ந்தவர் என்பதை வெளிப்படுத்தும் ஆளுமை உணர்வே என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தக் கூற்றுக்கு அவர்கள் கொடுக்கும் உதாரணமும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. சாதாரண குடிமக்கள் மட்பாண்டங்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.

Also Read | நுங்கு உண்பதால் ஏற்படும் ஏராளமான நன்மைகள் என்ன தெரியுமா? 

அவர்களை விட வசதியான செல்வந்தர்கள் வெள்ளிப் பாத்திரத்தைப் பயன்படுத்தினால், அதி செல்வந்தர்கள் தங்கப் பாத்திரங்களை பயன்படுத்தினார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது சரித்திரம்.
அதி செல்வந்தர்கள் தங்கப் பாத்திரத்தை பயன்படுத்தினால், அரசர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? என்ன அவர்கள், தங்கப் பாத்திரங்களில் நவரத்தின கற்களை வைத்து அலங்கரித்தார்கள். 

அதாவது, பாத்திரங்களின் பயன்பாட்டின் பின்னணியிலும் இருப்பது பொருளாதார ஏற்றத் தாழ்வே என்பது மனோதத்துவ நிபுணர்களின் கருத்தாகும், இது கருத்தாக்கமாகவும் இருக்கலாம். 

Also Read | Bizarre Hilarious: 16 மனைவிகள் 151 குழந்தைகள், அடுத்த திருமணத்திற்கு ரெடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News