ஆதார் - மின் இணைப்பு எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு...!
ஆதார் மற்றும் மின் இணைப்பு எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ள தமிழக அரசு, தங்கள் ஆதார் எண் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளும் வழிமுறையையும் வெளியிட்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் ஆதார் எண்ணுடம் மின் இணைப்பு எண்ணை இணைக்கக்கோரி அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கான கால அவகாசத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை கொடுத்திருந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருக்கும் 90 விழுகாட்டினர் தங்கள் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். சிலர் இன்னும் இணைக்காமல் உள்ளனர். காலக்கெடு முடிவடைந்துவிட்டால், எப்படி ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது? என அவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
மேலும் படிக்க | இனி வாட்ஸ்அப் மூலம் எல்ஐசி-யின் இந்த சேவைகளை பெறலாம்!
அவர்களுக்கான காலக்கெடுவை தமிழக அரசு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதுகுறித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் 90 விழுக்காட்டினர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்துவிட்டதாகவும், இலவச மின் இணைப்பை பெற்றிருக்கும் விவசாயிகள் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் விவரங்களை சமர்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்த காலவகாசத்துக்குள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், தங்கள் மின் இணைப்பு எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள இணையதளத்தையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml என்ற இணையதளத்தில் தங்களது மின் இணைப்பு எண் மற்றும் மொபைல் எண்ணை அளித்து மின் இணைப் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ