ChatGPT: சாட்ஜிபிடி ஓரிரு ஆண்டுகளில் கூகுளை காலி செய்யும்: எச்சரிக்கும் ஜிமெயில் நிறுவனர்

ChatGPT API: சாட்ஜிபிடியின் வருகைக்குப் பிறகு பல டெக் நிறுவன ஊழியர்கள் அச்சத்தில் இருக்கும் சூழலில், இது கூகுளையே இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காலி செய்துவிடும் என புயலைக் கிளப்பியிருக்கிறார் ஜிமெயில் நிறுவனர் பால் புச்செய்ட்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2023, 05:49 PM IST
  • கூகுளுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து
  • சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு
  • உலகம் முழுவதும் மக்கள் கொடுக்கும் ஆதரவு
 ChatGPT: சாட்ஜிபிடி ஓரிரு ஆண்டுகளில் கூகுளை காலி செய்யும்: எச்சரிக்கும் ஜிமெயில் நிறுவனர் title=

செயற்கை நுண்ணறிவு துறையில் அடுத்த பாய்ச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது சாட்ஜிபிடி. இந்த தொழில்நுட்பத்தின் வருகைக்கைப் பின்னர் உலகம் முழுவதும் இருக்கும் டெக் நிறுவனங்கள் அரண்டுபோய் இருக்கின்றனர். இதனுடைய பாய்ச்சலும் எதிர்பார்த்தைவிட அதிகமாக இருப்பதால், இது தொழில்நுட்ப துறையில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து இப்போதே பல லட்சக்கணக்கானோர் கவலை கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கோடிங், ஜாவா ஸ்கிரிப்ட், செயலி உருவாக்கம் என டெக் துறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் வழிகாட்டுகிறது இந்த சாட்ஜிபிடி. அதுமட்டுமல்லாமல் இதனுடன் தொடர்புடைய மற்ற ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், செயலிகளை உருவாக்கவும், வீடியோ, ஆடியோவை நொடியில் கிரியேட் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எத்தகைய வேலையாக இருந்தாலும், நொடியில் உங்கள் முன் பதிலை கொடுத்துவிடும் இந்த சாட்ஜிபிடி. இதனை உலகம் முழுவதும் இருக்கும் மக்களும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனிடம் இல்லாத பதிலே இல்லை என்கிற அளவுக்கு பூதாகரம் எடுத்து நிற்கிறது சாட்ஜிபிடி.

மேலும் படிக்க | கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்

இதனுடைய வளர்ச்சி இப்போது உலகின் மிகப்பெரிய டெக் பிரவுசர் ஜாம்பவானான கூகுளையே ஆட்டிப் பார்க்க வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் கூகுள் பிரவுசரின் வேலையை இது முழுமையாக காலி செய்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதன் வருகை மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இதனைப் பார்த்து கூகுள் நிறுவனம் புதிதாக ஒரு சாட்ஜிபிடியை உருவாக்கினால் கூட அதற்குள் மிகப்பெரிய தொலைவில் முன் நின்று கொண்டிருக்கும் இப்போது இருக்கும் சாட்ஜிபிடி. இதனால் கூகுளுக்கு ஏற்படப்போகும் இழப்பை நிச்சயம் தடுக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஜிமெயிலை உருவாக்கிய டெக் நிபுணர் பால் புச்செய்ட் பேசும்போது, கூகுளின் இடத்தை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சாட்ஜிபிடி காலி செய்துவிடும் என உறுதியாக எச்சரித்துள்ளார். பிரவுசர் வழியாகவே கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகம் சம்பாதித்து வருகின்றன என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், அந்த இடத்தை விரைவில் சாட்ஜிபிடி பிடித்துவிடும் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து கூகுளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எம்பிஏ உள்ளிட்ட எந்த தேர்வுகளையும் சாட்ஜிபிடியைக் கொண்டு ஒருவர் எளிதாக பாஸ் செய்துவிட முடியும். இப்போது இருக்கும் ஒரே ஒரு சிக்கல் என்னவனெறால் ஏஐ தொழில்நுட்பங்களை எப்படி பயன்படுத்துவது என்று பலருக்கும் தெரியவில்லை. அனைத்து தரப்பு மக்களும் அதனை சரியாக உபயோகிக்க தெரிந்து கொண்டால், கூகுள் உள்ளிட்ட பிரவுசர்களின் வீழ்ச்சியை தடுக்க முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Top 5 ChatGPT: 2023 ஆம் ஆண்டில் முதல் 5 சிறந்த ChatGPT குரோம் எக்ஸ்டன்ஸ்

மேலும் படிக்க | ChatGPT: ஆப்பிள் வாட்சில் சாட்ஜிபிடி..! வாட்ஸ்அப் முதல் வாய்ஸ் கால் வரை செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News