தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி மற்றும் விநியோக பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் லிமிடெட் (Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO)) புதிய வேலைவாய்ப்புக்காக விண்ணப்பங்களைக் கோருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் 215 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணிகளுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 


2003 ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தின் பிரிவு 131 இன் கீழ் 1 நவம்பர் 2010 இல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிறுவனம் TANGEDCO புதிய பணிக்கான விண்ணப்பங்களை (Job aAert) வரவேற்கிறது. 


தமிழகத்தின் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக செயல்படும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த நிறுவனம். 4,300 மெகாவாட் வரை மின்சாரம் வழங்கும் காற்றாலைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைக் கொண்ட நிறுவனம் ஆகும். 


மேலும் படிக்க | பட்டதாரிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வேலைவாய்ப்பு


அண்மையில் TANGEDCO புதிய வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. 


இந்த தமிழக அரசு பணியில் 215 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு நடைமுறை என அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.  



விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் (11.05.2022) தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். ஆன்லைன் விண்ணப்பம் என்பதால், விண்ணப்பிப்பது எளிது. 


Electrical Thermal Power Plantஇல் எலக்ட்ரீசியன் பதவிக்கு மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக உள்ளன.


மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!


கல்வி தகுதி: TANGEDCO அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பள்ளிகளில் 10வது முடித்திருக்க வேண்டும்.


TANGEDCO தேர்வு நடைமுறை:
விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


பணிக்கான உதவித்தொகை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்க்கு மாதம் ரூ.6,000 – 8,050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு


விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் TANGEDCO அதிகாரப்பூர்வ வலைத்தளமான tangedco.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 11-04-2022 முதல் 11-மே-2022 வரை விண்ணப்பிப்பதற்கான காலக் கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  


பத்தாம் வகுப்பு படித்தவர்களும் அரசுப் பணியில் சேருவதற்கான பொன்னான வாய்ப்பு இது. இன்றே கடைசிநாள் என்பதால் உடனெ விண்ணப்பிக்கவும்.


மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR