புதிய ரேஷன் கார்டு பணிகள் நிறுத்தி வைப்பு? தமிழக அரசு கண்டிஷனால் பெண்கள் ஷாக்
கலைஞர் உரிமைத் தொகை பணிகள் நடைபெற்று வருவதால் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களில் இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு தமிழ்நாடு அரசு செயல்படுத்த இருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும். இதற்கான விண்ணப்ப விநியோகங்கள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். முதலில் குறிப்பிட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு இப்போது நகர்புற பெண்களும் பெறும் வகையில் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. இதன்படி, மகளிர் உரிமைத் தொகை பெறுவோரின் எண்ணிக்கை தமிழக அரசு கணக்கிட்டத்தைவிட அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | குடும்பத்தலைவிகளுக்கு அலர்ட்! 1000 ரூபாய் வாங்க போறீங்களா? இவற்றை சரி பார்க்கவும்!
இது ஒருபுறம் இருக்க இவ்வளவு நாள் கூட்டு குடும்பங்களாக இருந்தவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக தனியாக ரேஷன் கார்டுகள் பெறுவதற்கு விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். ரேஷன் கார்டுகளில் இருக்கும் பெயர்களை நீக்கிவிட்டு புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் பேசும்போது, கடந்த சில வாரங்களில் மட்டும் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் மற்றும் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுவதற்காக பொதுமக்களிடையே இருக்கும் ஆர்வத்தை காட்டுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அரசு புதிய ரேஷன் கார்டு நடைமுறையை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக பதிவாகி வருவதால், இதற்கான நடைமுறைகளை தொடர வேண்டாம் என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளாக சேர்ந்து கொள்ளலாம் என நினைத்த பெண்களுக்கு அரசின் இந்த நடைமுறை அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசு எந்த பாரபட்சமும் இல்லாமல் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு உடனடியாக புதிய அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | எண்ணெய் நிறுவனங்களின் கொள்ளை லாபம் - பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலியுறுத்தல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ