குடும்பத்தலைவிகளுக்கு அலர்ட்! 1000 ரூபாய் வாங்க போறீங்களா? இவற்றை சரி பார்க்கவும்!

1000 Rupees Scheme: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளுக்கு  டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2023, 06:29 PM IST
  • அரசு சில வாரங்களுக்கு முன்பு கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டத்தை அறிவித்திருந்தது.
  • இதன் வழிக்காட்டு நெறிமுறைகள் இன்று வெளியாகியுள்ளது.
  • 1000 ரூபாய் வாங்கும் முன்பு மகளிர் என்னென்ன செய்ய வேண்டும்..?
குடும்பத்தலைவிகளுக்கு அலர்ட்! 1000 ரூபாய் வாங்க போறீங்களா? இவற்றை சரி பார்க்கவும்!  title=

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் நகர்புற பகுதிகளுக்கு  டோக்கன் மற்றும் விண்ணப்பங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது

ஆய்வுக்கூட்டம்:

தலைமைச் செயலாளர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தல் கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதில் காணப்பட்ட குறைபாடுகளை களைந்து நகர்புற பகுதிகளுக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அண்ணாமலை நடைபயணம்... அமித் ஷா வந்தாலும் புறக்கணிக்கும் இபிஎஸ் - என்ன காரணம்?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் 01.08.2023 முதல் 04.08.2023 ஆகிய நான்கு தினங்களுக்குள் முழுமையாக விநியோகம் செய்யப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு நியாயவிலைக்கடைக்கும் தனித்தனியாக விற்பனையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்ப விநியோகத்தை முடிக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அரசின் நெறிமுறைகள்:

-500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 60 வீதமும், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும், 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 விதமும், 2000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

-எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

-இவ்விபரம் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடையில் தெளிவாக குறிப்பிடப்பட்டு Standard போஸ்டரில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

-ஒரு நாளைக்கான 60 டோக்கன்களை ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. 

-விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண் தவறாமல் எழுதப்பட வேண்டும். எழுதுவதற்கு இடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது 

-டோக்கன்களில் முகாம் நடைபெறும் நாள், நேரம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். நேரத்தை பொருத்தவரை காலை அல்லது மதியம் என்று பொதுவாக குறிப்பிடுவதை தவிர்த்து ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் நேரம் குறிப்பிடப்பட வேண்டும்.

-ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு டோக்கன் விநியோகம் செய்யும்போது அப்பகுதியில் இறப்பு, வீட்டில் ஆள் இல்லாதவர்கள், விண்ணப்ப படிவம் வேண்டாம் என மறுப்பு தெரிவிப்பவர்கள் விவரங்களை அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது.

-ஒரு குறிப்பிட்ட முகாமிற்கு ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்கள் வழங்கப்பட்டது என்பது குறித்தும் அதில் எத்தனை நபர்கள் முகாமிற்கு வருகை புரிந்துள்ளனர் என்பது போன்ற விவரங்கள் மாநில அளவில் அன்றாடம், மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ள்து. முகாமிற்கு தேவையான அளவை விட கூடுதலாகவோ குறைவாகவோ டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 

குடும்ப தலைவிகள் கவனத்திற்கு..

1000 ரூபாய் வாங்கும் பெண்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என அரசு சில வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அவற்றில் சில..

>1000 ரூபாய் வாங்கும் பெண்களுக்கு வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. 

>கார் வைத்திருக்க கூடாது. 

>ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பேன் கார்டு, வருமான வரி சான்றிதழ் ஆகியவை முக்கியமான ஆவணங்கள். 

>இந்த மகளிர் உரிமை தொகை, அரசு ஊழியர்களுக்கோ அரசு அதிகாரிகளுக்கோ செல்லாது. 

>வீட்டில் ஒருவருக்கு மட்டும்தான் இந்த உரிமைத்தொகை கிடைக்கும். 

மேலும் படிக்க | ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News