தமிழகத்தின் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை அடுத்தடுத்து இழந்து தவிக்கிறது தமிழ்நாடு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் கலைஞர் கருணாநிதி அவர்கள். சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட 15 தேர்தல்களில் 13 தேர்தல்களில் பங்கேற்றவர் கலைஞர் கருணாநிதி. இந்த 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே மக்களின் தீர்ப்பாய் பெற்ற தலைவர் கருணாநிதி.


தமிழக அரசியில் மாறி மாறி தி.மு.க-வும் அ.தி.மு.க-காவும் ஆட்சியமைத்து வந்தது.  இந்த நிலையில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.கட்சியின் தலைவராக கருணாநிதி இருந்து வருகிறார். இது போலவே அ.தி.மு.கட்சியின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் அரசியல் ஜாம்பவானாக திகழ்ந்துள்ளார்.


அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்ணுதாரமான விளங்கியவர். அத்துடன், அவர் வழி பின்பற்றி அரசியலுக்கு வந்த பெண்கள் ஏராளம். அவர் பெண்களுக்கான நலத்திட்டங்களை செய்துள்ளதுடன், தனது கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். தொடர்ந்தும் 5 தடவை முதல்வராக பதவி வகித்து அரசியலில் தனெக்கென ஒரு இடத்தை வகித்து வந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மக்கள் பிரதிநிதியாக மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து இறுதி வரை போராடிய ஒருவராக கருணாநிதி விளங்குகின்றார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மக்களை கவர்ந்த தி.மு.க தலைவர் கருணாநிதி 13 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவராவார்.


மேலும், அவர் 5 முறை முதல்வராகவும் பதவி வகித்தார். எம்.ஜி.ஆர் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவர்களுள் இருந்த நட்பு அப்படியேதான் இருந்தது. இந்த வகையில் கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக கட்சியிலும் நேரடியாக அவர் ஈடுபடாவிட்டாலும் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று மாலை 6.10 மணிக்குகாலமானார். இதனால் தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது. 


அண்ணா, காமராஜர், எம். ஜி. ஆருக்கு பின்னர் தமிழக அரசியல் ஜாம்பவான்களாக விளங்கிய கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் இழந்துள்ளனர் தமிழக மக்கள்.....!