Rasipalan October 02: புரட்டாசி 16ம் நாள் ராசிபலன்
கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடக் கலையின் மூலம் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
புதுடெல்லி: கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் ஜோதிடக் கலையின் மூலம் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...
ராசிபலன் - 02-10-2021
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உறவினர்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். கால்நடைகள் தொடர்பான விஷயத்தில் நிதானம் வேண்டும். ஏற்ற, இறக்கமான நாள்.
ரிஷபம்: தாய் பற்றிய கவலைகள் மனதில் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும். பூமி தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் மேம்படும். காது சம்பந்தமான இன்னல்கள் குறையும். மனதிற்கு விரும்பிய புதிய அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். ஒத்துழைப்புகள் கிடைக்கும் நாள்.
மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அறிமுகங்களால் நன்மைகள் உண்டாகும் நாள்.
Also Read | ஆரோக்கியம் தரும் மந்திரங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்
கடகம்: மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும். எழுத்து தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். கற்பனைத் திறன் மேம்படும் நாள்.
சிம்மம்: பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் முதலீடுகள் மேம்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அலைச்சல்கள் உண்டாகும் நாள்.
கன்னி: நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப சில மாற்றங்களை செய்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். தெளிவுகள் பிறக்கும் நாள்.
துலாம்: நிர்வாகப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தந்தையின் ஆரோக்கியம் நிமிர்த்தமான விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மைகள் படிப்படியாக குறையும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கனவுகள் பிறக்கும் நாள்.
Also Read | பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள் ஏன் குபேரனுக்கு வட்டி மட்டும் கட்டுகிறார்?
விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான முதலீடுகளில் பெரியோர்களின் கருத்துக்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், மாற்றமான சூழ்நிலைகளும் உருவாகும். எண்ணியவை ஈடேறும் நாள்.
தனுசு: முக்கியமான பணிகளை மற்றவர்களை எதிர்பார்க்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. உணர்ச்சி வேகம் இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார பணிகளில் அவசர முடிவுகளை விட சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். உடனிருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் பகிர்வதை குறைப்பது நல்லது. காரியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறைந்து மேன்மையான சூழ்நிலைகள் உருவாகும். உற்சாகம் மேம்படும் நாள்.
கும்பம்: கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சமங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பாராத மாற்றங்கள் பிறக்கும் நாள்.
மீனம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். குழந்தைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் சாமர்த்தியமாக செயல்பட்டு லாபத்தை மேம்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.
Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR