Tata Cheapest SUV: தீபாவளி ரிலீசாக மலிவு விலையில் பட்டையைக் கிளப்ப வருகிறது Tata HBX
டாடா மோட்டார்ஸ் மிக விரைவில் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் ஒரு அதிரடியான அறிமுகத்தை செய்யவுள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தளர்ந்த நிலையில், வாகன நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகின்றன.
டாடா மோட்டார்ஸ் மிக விரைவில் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் ஒரு அதிரடியான அறிமுகத்தை செய்யவுள்ளது. கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை தளர்ந்த நிலையில், வாகன நிறுவனங்கள் தங்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்த தயாராகின்றன. டாடா மோட்டார்ஸும் இதற்கு விதிவிலக்கல்ல. டாடா மோட்டார்ஸ் அதன் மலிவான எஸ்யூவி-ஐ அறிமுகம் செய்யவுள்ளது.
டாடா இந்த ஆண்டு புதிய மைக்ரோ எஸ்யூவியை அறிமுகப்படுத்தவுள்ளது
எஸ்யூவி (SUV) பிரிவில் தனது பிடியை வலுப்படுத்த, டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி சஃபாரி ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது அறிமுகமானவுடன் வாகன சந்தையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இப்போது டாடா மோட்டார்ஸ் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
டாடா எச்.பி.எக்ஸ்-ஐ அறிமுகம் செய்வதற்கான ஏற்பாடுகள்
இந்த முறை டாடா மோட்டார்ஸ் (TATA Motors) வழக்கமான எஸ்யூவி அல்லது காம்பாக்ட் எஸ்யூவியைக் கொண்டுவரப் போவதில்லை. மாறாக வேறு ஒரு வாகனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. ஏனெனில் இப்போது டாடா மோட்டார்ஸ் மைக்ரோ எஸ்யூவி-யில் தனது இருப்பை சோதிக்கவுள்ளது. இந்த மைக்ரோ எஸ்யூவிக்கு டாடா மோட்டார்ஸ் Tata HBX என பெயரிட்டுள்ளது. மைக்ரோ எஸ்யூவி இந்தியாவில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும், டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய முயற்சியை எடுக்க முடிவு செய்துள்ளது.
ALSO READ:Tata Motors: 10 எலெக்ட்ரிக் கார்களை வெளியிட டாடா மோட்டர்ஸ் திட்டம்
பண்டிகை காலங்களில் அறிமுகப்படுத்தப்படும்
டாடா மோட்டார்ஸ் இந்த காரை எப்போது அறிமுகப்படுத்தும் என்ற கேள்வி இப்போது எழுகிறது. பண்டிகை காலங்களில் அதாவது நவம்பர் தொடங்கி டிசம்பர் வரையிலான காலத்தில் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் நுகர்வோர் புதிய வாகனங்கள், பொருட்கள் வாங்குவதில் பொதுவாக ஆர்வம் காட்டுவதால், இந்த காலகட்டத்தில் புதிய காரை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
HBX இன் அம்சங்கள்
ஊடக அறிக்கையின்படி, இந்த புதிய வாகனத்தில், தியாகோ மற்றும் அல்ட்ரோஸில் இருக்கும் அதே 1.2 லிட்டர் எஞ்சின் இருக்கும். காரின் ஹை-எண்ட் வகையை டர்போ சார்ஜ்ட் எஞ்சினுடனும் வழங்க முடியும். இது தவிர, இந்த காரில் எல்.ஈ.டி பகல்நேர இயங்கும் விளக்குகள், புதிய அலாய் வீல்கள், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை கிடைக்கும். மேலும் இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புகளும் இருக்கும்.
இதன் விலை எவ்வளவு இருக்கும்
முதல் பார்வையில், டாடா மோட்டார்ஸின் இந்த மைக்ரோ எஸ்யூவி காம்பாக்ட் எஸ்யூவி-வியின் வடிவமைப்பை ஒத்ததாக, எஸ்.யு.வி மற்றும் ஹேட்ச்பேக்கின் கலப்பின பதிப்பாகத் தோன்றுகிறது. இந்த காரின் மார்கெட்டிங், மாருதி சுசுகி இக்னிஸ் (Maruti Suzuki) மற்றும் மஹிந்திரா கேயூவி-யின் ஆப்ஷன் என்ற வகையில் செய்யப்படும். டாடா மோட்டார்ஸ் மைக்ரோ எஸ்யூவி பிரிவில் வலுவான முறையில் உள்நுழைய நினைக்கிறது. ஆகையால், இதன் விலை வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் நிர்ணயிக்கப்படக்கூடும். மதிப்பீடுகளின்படி, இதன் விலை ரூ .5 லட்சம் முதல் ரூ .7 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகின்றது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR