TDS தொடர்பான விதியில் ஜூலை 1 முதல் மாற்றம்: அதிக வரி செலுத்த வேண்டி வருமா?
TDS Rule Changing from July 1: ஒரு வருடத்தில் ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட லாபம் கிடைத்தால், அதற்கு 10 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
ஜூலை 1 முதல், டிடிஎஸ் உடன் இணைக்கப்பட்ட வரி விலக்கு விதி அமலுக்கு வருகிறது. இதன்படி, பட்ஜெட்டில் வருமான வரிச் சட்டத்தில் 194R என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் கீழ் ஒரு வருடத்தில் ரூ.20,000 அல்லது அதற்கு மேற்பட்ட லாபம் கிடைத்தால், அதற்கு 10 சதவீத டிடிஎஸ் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
எந்தவொரு வணிகம் அல்லது தொழிலில் கிடைக்கும் சலுகைகள் அல்லது கூடுதல் வசதிகள் தொடர்பான புதிய வரி விலக்கு (டிடிஸ்) விதிகள் குறித்த குழப்பம் நீங்கும் என்று நிதி அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம், 2020-21 நிதியாண்டின் கீழ் நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றால், நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களின் பட்டியலில் வருவீர்கள். அதாவது 2022-23 நிதியாண்டுக்கு நீங்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிடிபிடி), சில வழிகாட்டுதல்களைத் தளர்த்தி, 2022-23 நிதியாண்டில் அதிக வரி விலக்கின் கீழ் வரும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்காக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஒருவர் முந்தைய நிதியாண்டில் ஐடிஆர் தாக்கல் செய்யாமல், அந்த ஆண்டில் அவரது மொத்த டிடிஎஸ் மற்றும் வரி ரூ.50,000ஐத் தாண்டினால், அது அதிக டிடிஎஸ்க்கு உட்பட்டதாக இருக்கும். அந்த சூழலில் வங்கிகள் அதிக டிடிஎஸ்-ஐ சரிபார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தகவலின்படி, 2023 நிதியாண்டில் வரிக் கழிப்பாளர் மற்றும் சேகரிப்பாளர் மீதான சுமையைக் குறைக்க அதிக வரி விலக்கு பெற்ற நபர்களின் பட்டியலில் யாருடைய பெயரும் இல்லை. இதன்படி, சம்பந்தப்பட்ட நபர், மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான சரியான வருமானத்தை (தாக்கல் மற்றும் சரிபார்க்கப்பட்டது) FY23 இன் போது தாக்கல் செய்தால், அவரது பெயர் வரி விலக்கு பெற்ற நபர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது செல்லுபடியாகும் வருமானத்தை தாக்கல் செய்யும் தேதியில் செய்யப்படும்.
வணிக விஷயத்தில் வரி விலக்கு விதி
பிரிவு 206AB இன் , சட்டப்பிரிவு பிரிவு 1948 இன் கீழ் ஒரு நபர் மெய்நிகர் டிஜிட்டல் சொத்தை (VDA) மாற்றினால் அது வரி விலக்குக்கு உட்படாது. அதேசமயம் வணிகமாக இருந்தால், 50 லட்சம் அல்லது 1 கோடிக்கு மேல் VDA பரிமாற்றத்தில் வரி விலக்கு அனுமதிக்கப்படுகிறது.
இவர்கள் அதிக வரி விலக்கு பட்டியலில் இல்லை
பிரிவுகள் 206AB மற்றும் 206CCA விதிகளின்படி, இந்தியாவில் வசிப்பவராக இல்லாத எந்தவொரு நபரும் அதிக வரி விலக்குக்குத் தகுதியற்றவர் என்று சுற்றறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR