டீ கடை-ல் இவ்வளவு வருமானமா! `Yeole Tea` கதை தெரியுமா?
மகாராஸ்டிர மாநிலம் புனேவில் இருக்கும் பிரதான நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பெரும் பெரும் போட்டியாளராக வந்திருப்பது ஒரு சாதாரண டீ கடை என்றால் நம்ப முடிகிறதா?
புனே: மகாராஸ்டிர மாநிலம் புனேவில் இருக்கும் பிரதான நிறுவனங்களுக்கு வர்த்தக ரீதியாக பெரும் பெரும் போட்டியாளராக வந்திருப்பது ஒரு சாதாரண டீ கடை என்றால் நம்ப முடிகிறதா?
புனேவை மையமாக கொண்டு இயங்கும் "Yeole Tea House" என்னுன் இந்த டீ கடை நகரத்தில் மிகவும் பிரபலம். இந்த டீ கடையின் மாத வருமானம் சுமார் 12 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கடையின் உரிமையாளர்களில் ஒருவரான நவ்நத் யாவேல் இது குறித்து தெரிவிக்கையில், விரைவில் எங்கள் கடையின் டீயினை உலக தரத்தில் உயர்த்த காத்திருக்கின்றோம்.
பரோட்டா வியாபாரத்தினை போல் டீ கடை வியாபாரமும் தற்போது இந்தியர்களில் தொழில் முனைப்பாக மாறி வருகிறது. என்னை பொருத்தவரை இந்த முனைப்பும் நாட்டின் முன்னேற்றத்திற்கான ஓர் ஆரம்ப புள்ளி தான். அதற்கு என் பங்களிப்பினை தருவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
தற்போது Yeole Tea House ஆனது நகரத்தின் 3 இடங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது 12 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!