Tech Guide: உங்கள் பழைய mobile-ஐ விற்க வேண்டுமா? பயனுள்ள சில குறிப்புகள் இதோ!!
தொலைபேசிகளை விற்கும்போது மக்கள் சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் அதனால் கவலைப்பட வேண்டியுள்ளது.
புது தில்லி: மொபைல் ஃபோன் (Mobile Phone) பழையதானாலோ அல்லது அதன் புதிய மாடல் சந்தையில் வரும்போதோ, புதிய ஃபோனை வாங்க பெரும்பாலானவர்கள் பழைய ஃபோனை விற்கிறார்கள். ஆனால் தொலைபேசிகளை விற்கும்போது மக்கள் சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் அதனால் கவலைப்பட வேண்டியுள்ளது.
உங்கள் மொபைலை விற்கும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களுக்குத் தேவையான சில முக்கிய உதவிக்குறிப்புகளை இங்கு வழங்கப் போகிறோம். நீங்கள் மொபைலை விற்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இனி இந்த முக்கிய உதவிக்குறிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மொபைலை விற்பதற்கு முன்னர் தரவுகளை காப்புப்பிரதி (Data Backup) எடுத்துக் கொள்ளுங்கள்
ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதற்கு முன், தேவையான தரவின் பேக் அப்பை (Data Backup) எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் தரவு எப்போதும் பத்திரமாக இருக்கும். பேக்கப் எடுக்க, Setting-ல் சென்று backup ஆப்ஷனில் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் தரவு Google Drive-ல் தானாகவே save ஆகி விடும்.
ஃபோனை Factory Reset செய்யவும்
தொலைபேசியை விற்கும் முன் கண்டிப்பாக Factory Reset செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், உங்கள் ஃபோனில் உள்ள அனைத்து தரவும் நீக்கப்படும். மேலும், கூகிள் முதல் இன்ஸ்டாகிராம் வரையிலான ஐடிகளும் நீக்கப்படும். Factory Reset செய்ய, Setting-கு செல்லவும். இங்கு பேக் அப் அண்ட் ரீசெட் என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதில் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் தொலைபேசியில் உள்ள எல்லா தரவும் நீக்கப்பட்டுவிடும்.
ALSO READ: iPhone 12 Mini, iPhone 12 Max: எத்தனை inch? எப்போது launch? விவரம் உள்ளே......
OLX போன்ற வலைத்தளத்தின் மூலம் உங்கள் தொலைபேசியை விற்கவும்
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் எதை விற்கவேண்டுமானாலும் OLX போன்ற வலைத்தளத்தை நாடுகிறார்கள். நீங்களும் உங்கள் தொலைபேசியை OLX அல்லது Quikr போன்ற தளங்கள் மூலமாக விற்பது பாதுக்காப்பானதாக இருக்கும். தொலைபேசியை விற்க, நீங்கள் தளத்தில் லாக் இன் செய்து, உங்கள் மொபைலின் சரியான தகவலை உள்ளிட வேண்டும். இதன் பின்னர், பேச்சுவார்த்தை கட்டம் தொடங்கும். உங்கள் தொலைபேசிக்கு நீங்கள் விரும்பிய விலை கிடைத்து விட்டது என உங்களுக்கு தோன்றும் போது அதை உடனடியாக நீங்கள் விற்று விடலாம்.
Box மற்றும் Bill கண்டிப்பாக வழங்க வேண்டும்
மொபைலை விற்கும்போது, உங்கள் மொபைலுக்கான பில், அக்சசரீஸ் மற்றும் பெட்டியை கண்டிப்பக வழங்க வேண்டும். இதனால், வாங்கும் நபருக்கு உங்களது பழைய மொபைலைப் பற்றிய நல்ல கருத்து உருவாகும். இப்படிச் செய்வதால் மொபைலின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன.
ALSO READ: அசத்தலான 64MP கேமிராவுடன் வருகிறது Realme 7i ... அதுவும் அதிரடி விலையில்...!!!