40,000 கோடி ரூபாய் வேண்டாம் என்று சொல்லி துறவறம் மேற்கொண்ட தமிழரை தெரியுமா?
Buddhist monk: ஏர்செல்லின் உரிமையாளரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் வாரிசு! புத்தர் வழியில் சாம்ராஜ்ஜியத்தைத் துறந்து துறவியான தமிழர்
புத்தரைப் போல அனைத்து சுகபோகங்களையும் துறந்து துறவியான நவீன துறவியைப் பற்றி கேள்விப்படுபவர்கள் அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். ஆச்சரியத்திற்கு காரணம் இன்றைய நவீன வாழ்க்கையை விட்டு விலகி, காட்டுக்கு சென்று துறவியானவர் தமிழர் என்பதும், அவர் பிரபலமான தொழிலதிபரின் வாரிசு என்பதும் தான். 40,000 கோடி ரூபாய் வேண்டாம் என்று சொல்லி துறவறம் மேற்கொண்ட தமிழர் சிறிபான்யோ. இவர் ஆனந்த கிருஷ்ணன் என்ற தமிழரின் மகன் என்பது மட்டுமல்ல,
40,000 கோடியை விட்டுக்கொடுத்த துறவி, இந்திய தொலைபேசி நிறுவனமான ஏர்செல்லின் உரிமையாளரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் உரிமையாளரான கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன், ஏ.கே என அறியப்படுகிறார். அவரது மகன், தனக்குச் சொந்தமான அனைத்து செல்வங்களையும் துறந்து துறவியாக காட்டில் வாழத் தேர்ந்தெடுத்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாகிவிட்டது. தற்போது சிறீபன்யோ தாய்லாந்தின் தாவோ டம் மடாலயத்தின் மடாதிபதியாக சேவை புரிந்து வருகிறார்.
மேலும் படிக்க | Bone Health: குளிர்காலத்தில் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க இனிப்பான வழிகள்
இங்கிலாந்தில் வளர்ந்த சிறீபன்யோ, 8 மொழிகள் வரை பேசக்கூடியவர். அவர் 18 வயதாக இருக்கும்போதே புத்த துறவியாக மாற முடிவு செய்தார்.
தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள் என பல்வேறு தொழில்களில் கால் பதித்து வெற்றிகரமாக இயங்கி வரும் தொழிலதிபர், தனது மகன் தொழிலை முன்னெடுத்துச் செல்வார் என்று நம்பிய நிலையில், மகன் துறவியானார். ஆனந்த் கிருஷ்ணனுக்கு குறைந்தது 9 நிறுவனங்களில் பங்குகள் உள்ளன, அவர் மலேசியாவின் பணக்காரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எஸ். தோனி தலைமையிலான ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனம் ஏர்செல். ஏர்செல் ஆனந்த கிருஷ்ணன் புத்த மதத்தை சேர்ந்தவர்.
கல்வி, மனிதாபிமான சேவை என பல்வேறு சமூக நலப்பணிகளுக்கு நன்கொடை அளிப்பவர் என்று அறியப்படுபவர். மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தை விட்டு விலகி துறவியாக மாறுவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், அவர் வேடிக்கைக்காக துறவற வாழ்க்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தர், சித்தார்த்தன் என்ற இளவரசனாக இருந்தபோது, அவரே அடுத்த அரசன் என்று உலகமே நினைத்திருந்த நிலையில், அவர் மனைவி, குழந்தை, சாம்ராஜ்ஜியம் பணம் என அனைத்தையும் துறைந்து துறவியானது சரித்திரம். இன்றைய சரித்திரத்திலும் அப்படியொரு துறவி இருக்கிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது.
(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. கட்டுரை தகவலுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ