அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வெளிநாட்டு மொழிகளில் தெலுங்கு மொழி என தகவல் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஆய்வு நிலையம் செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


கடந்த 2010ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 86% அளவில் தெலுங்கு மொழி பரவியுள்ளது. இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் ஒன்று தெலுங்கு என்பதுடன் உலகில் அதிகமான பேசும் 20 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இதில் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்ற இந்தியாவில் இருந்து செல்வோரில் அதிகளவானவர்கள் தெலுங்கு பேசும் மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் ஹிந்தி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உருது மொழி உள்ளது. மூன்றாவது இடத்தில் குஜராத்தி மொழி உள்ளது. நான்காவது இடத்தில் தெலுங்கு மொழி உள்ளது. இதில், அமெரிக்காவில் பேசப்படும் இந்திய மொழிகளில் ஏழாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது. அமெரிக்காவில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 732 தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தியாவில், தமிழ் அதிகமாக பேசும் மொழிகளில் 5 வது மொழியாகும். தமிழ் மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் அதிகளவில் பேசப்படுகிறது.


இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் குடியேற்றம் தொடர்பான ஆய்வில் வெளிவந்த தவவலின் படி 
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வெளிநாட்டு மொழிகளில் தெலுங்கு மொழி என கூறப்பட்டுள்ளது.