தை வெள்ளி விரதம்- தேவியை வழிபட்டால் என்ன நன்மைகள்
தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள்.
தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விசேஷமாகும். இந்த தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பொதுகாக தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள்.
இந்த நாளில், (Thai Velli 2022) அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை (Goddess Lakshmi) தரிசனம் செய்தால் நன்மையாவும் கிடைக்கும். செல்வத்தை அள்ளித் தரும் சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமை நாளில், உத்தராயண காலமாகிய தைமாதத்தில் தவறாமல் விரதம் கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.
ALSO READ | மாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்!
வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்த தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும்.
எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தை மாத வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. இந்த இரண்டு மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்து வரலாம்.
தை மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அதிகாலையில் வீட்டை மெழுகி, கோலமிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, லட்சுமிதேவிக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும். லட்சுமி கடைக்கண் பார்க்க தைமாத வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அதிகாலை நேரம் வழிபடுவது நல்லது. மகாலட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறும்.
மாலையில் வீட்டில் பூஜையைச் செய்துவிட்டு, அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். நம் குலத்தையே காத்தருள்வாள் தேவி.
ALSO READ | செவ்வாய்கிழமையில் இதை மறந்தும் செய்யக்கூடாத காரியங்கள்...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR