தாய்லாந்தை சேர்த்த பெண் ஒருவர், கார்ட்டூன்கள், விளையாட்டுகள் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுடம் COVID ஷீல்டுகளை தயார் செய்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு பிலவேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நாம் அதை சரியாக கடைபிடிதால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். அதாவது, வெளியில் செல்லும்போது முக்காகவாசம் அணிதல், கையுறைகளை அணிதல், தனிமனித இடைவெளிகளை பின்பற்றுதல் போன்றவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். இந்நிலையில், தாய்லாந்தை சேர்த்த பெண் ஒருவர், கார்ட்டூன்கள், விளையாட்டுகள் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுடம் COVID கவசங்களை தயார் செய்துள்ளார். 


கொரோனா பரவுவதை தடுக்க முக கவசத்துடன், கவசங்களை அணிவது அதிக பாதுகாப்பு தரும். சீனா, தாய்லாந்து, வியட்நாம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கவசங்கள் பொதுமக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், தாய்லாந்தைச் சேர்ந்த ஓர் பெண்மணி வித்யாசமான முக கவசங்களைத் தயாரித்து விற்று அதிக லாபம் ஈட்டி வருகிறார். 


31 வயது நிரம்பிய மாய்சா டாலர்டு (Maysa Talerd) என்ற பெண் முக கவசங்களில் புதுமையை புகுத்தி லாபம் ஈட்டி வருகிறார். சிறிய ஸ்டுடியோ அறையில் தயாரிக்கப்படும் இந்த கவசங்கள் குழந்தைகளைக் கவரும் வகையில் சூப்பர் ஹீரோக்கள், பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களின் படங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. இது தாய்லாந்து குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டிரான்ஸ்பரண்ட் கவசங்கள் அணிந்து போர் அடித்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இதேபோல மாஸ்குளில் விதவிதமான டிசைன்கள், பேட்டன்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


READ | சிவப்பு நிற கண் கொரோனா தொற்றுக்கான முதல் அறிகுறியாகும்: ஆய்வு


ஸ்டார் வார் கதாபாத்திரங்கள் முதல் ஜப்பானிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களான மொபைல் சூட் கண்டம் வரை அனைத்தும் இந்த கவசங்களில் உள்ளது. தாய்லாந்தில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் சமூக இடைவேளையுடன் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர். இந்த வித்யாசமான சூப்பர் ஹீரோ கவசங்களை அணிந்து சென்று தங்களது நண்பர்களுக்குக் காட்டுவதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.


தனது சூப்பர் ஹீரோ கவசங்களை அனைவரும் வாங்கும் வகையில் 180 பாட்டுக்கு (5.77 அமெரிக்க டாலர்) நியாயமான விலைக்கு விற்றுவருகிறார் டாலர்டு. பல பிரபல பொம்மை கடைகள் தற்போது மாய்சாவை தங்களுக்கு சூப்பர் ஹீரோ கவசங்களை செய்துதரச் சொல்லி அணுகியுள்ளனர். பொழுதுபோகாமல் வீட்டில் இருந்து பணம் ஈட்ட மாய்சா துவங்கிய தொழில் அவருக்கு பல வாய்ப்புகளை தந்துள்ளது.