Flowers for puja: கடவுளையும் மலரச் செய்யும் எட்டு வகையான மலர்கள் இவையே
நறுமணம் மிக்க மலர் அரும்புகளை, அவை மலர்வதற்குரிய சமயத்தில் பறித்து, பூக்களை தொடுத்து, தெய்வங்களுக்கு சாற்றுவது என்பது பாரம்பரிய வழக்கம். பூக்கும் எல்லா பூக்களும் இறைவனுக்கு மாலையாவதில்லை.
நறுமணம் மிக்க மலர் அரும்புகளை, அவை மலர்வதற்குரிய சமயத்தில் பறித்து, பூக்களை தொடுத்து, தெய்வங்களுக்கு சாற்றுவது என்பது பாரம்பரிய வழக்கம். பூக்கும் எல்லா பூக்களும் இறைவனுக்கு மாலையாவதில்லை.
அதே போல் மலரும் எல்லா மலர்களும் இறைவனுக்கு உகந்தவை அல்ல. இறைவனுக்கு சாற்றுவதற்கு உகந்த மலர்கள் எட்டு வகையானவை என்று "புட்ப விதி" என்று நூல் கூறுகிறது.
அஷ்ட புஷ்பங்கள் என்று பெருமை பெற்றுள்ள மலர்கள் எவை தெரியுமா? வெள்ளெருக்கு, புன்னை, செண்பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், அரளி, பாதிரி, செந்தாமரை என இந்த எட்டு பூக்களும் இறைவனுக்கு சாற்றினால் வாழ்வில் வளம் பெருகும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு மலர் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.
ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சூரியனுக்கு வில்வம் மற்றும் பாரிஜாத மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
Read Also | இறைவழிபாட்டில் தவிர்க்க வேண்டிய மலர்கள் எவை? - இதோ முழு விவரம்!
திங்கட்கிழமை ராகு காலத்தில் சந்திரனுக்கு வெள்ளை அலரி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செம்பருத்தி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
புதன்கிழமை ராகு காலத்தில் புதன் பகவானுக்கு துளசி இலைகள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
வியாழக்கிழமை ராகு காலத்தில் குரு பகவானுக்கு சாமந்தி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு வெள்ளை அரளி மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் சனி பகவானுக்கு சங்குபுஷ்ப மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
Also Read | வண்ணமிகு பூஜடை அலங்காரம்
ஆனால் இறைவனுக்கு மலர் சாற்றாவிட்டால் தவறாகிவிடுமோ என்ற அச்சம் பலருக்கு உண்டு. ஆனால் இதைப் பற்றி குழப்பமே இல்லாமல் இறைவனை வழிபடலாம். விதி என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா?
மலர்கள் இல்லை என்றால் கலவைப்பட வேண்டாம். ஒரு செடியில் சில மலர்கள் இருக்கும் என்றால், இலைகள் பல இருக்கும். இறைவனுக்கு உகந்த மலர்கள் உருவாகும் செடிகளின் இலைகளும் இறையருளால் வந்தவையே. இலைகள் இல்லாமல் மலர்கள் இல்லை. இலைகளை கொண்டே இறையை வழிபடலாம்.
"பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழல் வீரா" என்று திருப்புகழில் மலர்களை இறைவனுக்கு சாற்றுவது தொடர்பான சந்திஏகத்தை தீர்த்து வைத்துவிடுகிறார் அருணகிரிநாதர்.
இறைவனுக்குப் நைவேத்தியம் வைத்து தான் வணங்க வேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை இட்டு வணங்கினாலே போதும். கோ பூசை செய்தால் தான் கடவுள் கருணை காட்டுவார் என்று நினைக்க வேண்டாம். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும். அதுவே இறையை மகிழ்விக்கும்.
Also Read | உடையணியாத நிர்வாணக்கோலம் அல்ல, முடி ஆடை அலங்காரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR