புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளையும், உத்தரவுகளையும் பாரத ஸ்டேட் வங்கி சரியாக பின்பற்றாததால், ரூ.7 கோடி அபராதம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 


பாரத ஸ்டேட் வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து வகைப்பாடு விதிகள், நடப்பு கணக்குகள் தொடங்குதல் மற்றும் இயக்குதலில் நடத்தை விதிமுறைகள், பெரிய கடன் களுக்கான மத்திய தகவல் அமைப்புக்கு விவரங்கள் அளிப்பது, மோசடி அபாய மேலாண்மை, மோசடி புகார்கள் போன்றவைகளில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என தெரிந்தது.


இதன்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வாய்மொழி விளக்கம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை கடைபிடிக்காத காரணத்தால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.


இந்த அபராதம் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்துக்கு உட்பட்டே விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 படி மேற்கொள்ளபட்டு உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.