பிரிட்டிஷ் தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனமான 'தி ராயல் மிண்ட்' முழுக்க முழுக்க தங்கத்தால் ஆன உலகின் முதல் ஏடிஎம் அட்டையை உருவாக்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் 18 காரட் தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 18750 யூரோ (சுமார் 14 லட்சம் 70 ஆயிரம் ரூபாய்). மேலும் இதற்கு 'ராரிஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இந்த டெபிட் கார்டில் வாடிக்கையாளரின் பெயர் எழுதப்பட்டு கையொப்பமிடப்படும் என்றும்,. அட்டையின் எந்தவொரு பரிவர்த்தனைக் கட்டணமும் ஏற்படாது என்பது இதன் சிறப்பு. 



மேலும், அந்நிய செலாவணி கட்டணம் எதுவும் செலுத்த அவசியம் இல்லை எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இது ஆடம்பர கட்டண அட்டைகளின் பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 


இருப்பினும், எத்தனை வாடிக்கையாளர்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தங்க அட்டையின் சிறப்பு என்னவென்றால், இது 18 காரட் தங்கத்தால் ஆனது. அதன் பல அம்சங்கள் காரணமாக, இது ஆடம்பர கட்டண அட்டைகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.


இந்த டெபிட் கார்டில் வாடிக்கையாளரின் பெயர் மற்றும் கையொப்பம் இருப்பதால், இதனை வாங்க அதிக மக்களை ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த தங்க அட்டையுடன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணமும் இல்லை என்பதாலும் இந்த அட்டையின் மீதான ஆர்வம் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் உள்ளது.