4 ஆஸ்கர் விருதுகளை வென்ற தி ஷேப் ஆப் வாட்டர்
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
சினிமா துறையில் முக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்றது. மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற விருது விழாவானது 90-வது அகாடமி விருது விழாவாகும். இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் 2வது முறையாக ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த ஆண்டுக்கான சிறந்த படமாக தி ஷேப் ஆப் வாட்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஷேப் ஆப் வாட்டர் படத்திற்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது.
> சிறந்த திரைப்படம்- தி ஷேப் ஆப் வாட்டர்
> சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ (தி ஷேப் ஆப் வாட்டர்)
> சிறந்த இசைக்கான திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர் (அலெக்ஸாண்டர்)
> சிறந்த கலை இயக்குநர்- பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ (படம்- தி ஷேப் ஆப் வாட்டர்)