இதை செய்தால் நீளமான நகங்கள் கன்ஃபார்ம்
நகங்கள் நீளமாக வளர்வதற்கென்று சில வழிமுறைகள் இருக்கின்றன. அதுகுறித்து காணலாம்.
நகங்கள் ஆபத்தானதுதான் என்றாலும் அதை அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக, பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலுவான நகங்கள் தங்கள் விரல்களில் இருக்க வேண்டுமென்று விரும்புபவர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு அது சாத்தியமாவதில்லை. இதனால் பலர் நகங்களை எப்படி வலுவாகவும், நீளமாகவும் வளர்ப்பது என்ற குழப்பத்தில் இருப்பார்கள். உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்களுக்கு ஈரப்பதமூட்டும் கிரீம்களை உபயோகிக்கலாம்.
நகங்கள் எளிதில் உடையக்கூடிய வகையில் பலவீனமாக இருந்தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டியிருக்கும். நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதம் இருக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்களின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பாக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும்.
கியூட்டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்டிக்கிள் ஆயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்கக்கூடாது. நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது.
மேலும் படிக்க | பார்த்தவுடன் மனதை மயக்கும் ஆற்றல் படைத்தவர்கள் இந்த ராசிக்கார்ரகள்
மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் இது உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கான இதய ஆரோக்கியம் கேள்விக்குறியே... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ