மனிதர்களை அடுத்து தற்போது மாடு இனப்பெருக்கத்திற்க்காக டேட்டிங் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய காலகட்டத்தில் இணையதளத்தில் கிடைக்காத விஷயங்கள் இல்லை. நல்லதோ, கேட்டதோ அனைத்து ஒரே இடத்தில் கிடைத்து விடுகின்றனர். இன்றைய இளம்தலைமுறையினர் ஒருவருக்கொருவர் நட்புடன் பழக செல்போனில் ஏகப்பட்ட செயலிகள் வந்துவிட்டன. இந்த ஆப் மூலம் பெண்கள், ஆண்கள் தங்களுக்கு பிடித்தவருடன் பேசி பழக முடியும். செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு இவர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை.
 
இந்நிலையில், அம்நிதர்களை அடுத்து தற்போது மாடுகளுக்கும் டேட்டிங் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் நிறுவனம் ஒன்று டேடிங் செயலியான டிண்டர் போன்று டூடர் (Tudder)  என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.


இந்த டூடர் (Tudder) செயலி மாடு இனப்பெருக்கத்திற்கான ஒரு செயலியாகும். இந்தச் செயலி மூலமாகப் பசு மற்றும் காளை மாடு உரிமையாளர்கள் எளிமையாக இனப்பெருக்கத்திற்கான ஜோடியைத் தேட முடியும் என்று கூறுகின்றனர். டூடர் (Tudder) செயலி மூலமாக இனப்பெருக்கத்திற்கான மாடுகளைத் தேடும் போது இணை மாட்டின் புகைப்படம், வயது, இருப்பிடம் போன்ற முழு விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 


இது குறித்து ஹெக்டேர் அக்ரிடெக் கூற்றுப்படி, இணை நிறுவனரான ஜேமி மெக்னென்னஸ் கூறுகையில், "சரியான போட்டியைக் கண்டுபிடிப்பது மனிதர்களுக்கு கடினமாக இருக்கலாம், நீங்கள் ஒரு நான்கு கால் பண்ணை விலங்கு தான் என்றால், ஒருபுறம் இருக்கட்டும். பாரம்பரியமாக, பசுக்களுக்கான மு-பையை விளையாடும் முறையான ஒட்டுக்கேடு தேவைப்படும்: வெவ்வேறு பண்ணைகளில் நம்பிக்கைக்குரிய ஒவ்வொரு மந்தையும், அல்லது ஏலச் சந்தையில், சந்தை சந்தையில் சிறந்த மாடு வெறுமனே உங்களைப் பறிகொடுத்த அபாயத்தை இயக்கும் போது.




இனப்பெருக்கம் செய்யும் கால்நடைகளை இப்போது வாங்குவது ஒரு பெரிய அளவிலான மரபணு தரவு மூலம் சரியான போட்டியை உருவாக்க உதவுகிறது. இது ஒரு சுய-அறிவிப்பு GSOH ஐ விட விஞ்ஞானத்தில் செல்லுபடியானது தவிர, மனித ஆன்லைன் டேட்டிங் சுயவிவரம் சமமானதாகும் என தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் இந்தச் செயலி பயன்பாட்டிற்கு வந்தால் நாட்டு மாடு இனங்களைக் கண்டறிந்து இனப்பெருக்கம் செய்ய வசதியாக இருக்கும் என்று விலங்கின ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்தச் செயலியில் ஸ்வைப் செய்யும் போது மாடு இனப்பெருக்கம் செய்வது போன்ற ஒலி கேட்கும்படியும் வடிவமைத்துள்ளனர்.