மூளையை பாதிக்கும் பழக்கங்கள்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதனின் முக்கியமான உறுப்புகளுள் ஒன்று, மூளை. நம் உடலில் உள்ள அத்தனை பாகங்களும் மூளை கூறும் பேச்சைதான் கேட்கும். மூளை உத்தரவு கொடுக்காமல் ஒரு அனுவும் நம் உடலில் அசையாது என்று கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட மூளையை பாதிக்கும் செயல்பாடுகளில் நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ செயல்படுகிறோம். அவை என்னென்ன பழக்கங்கள்? இந்த பழக்கங்களினால் நமது மூளை எந்த வகையில் பாதிப்படைகின்றன? 


1.உணவுகளில் செய்யும் தவறுகள்:


நாம் உட்கொள்ளும் உணவுகளுக்கும் நமது மூளைக்கும் பல தொடர்புகள் உண்டு. அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது நமது மூளையை பெரிதளவில் பாதிக்க கூடும். இதில், உடலுக்கு சத்து தறும் பொருட்கள் குறைவாக இருப்பதாலேயே இது நிகழ்கிறது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், அதிகம் பதப்படுத்தப்பட்ட பொருட்களான பீட்ஸா, ஹாட் டாக், பர்கர், இறைச்சி போன்றவற்றை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | பற்கள் முத்து போல் பளபளக்க வீட்டு வைத்தியம்.. இதை மட்டும் தினமும் தடவுங்க


2.பதற்றம், மன அழுத்தம்:


இந்த கால சூழலில் நம்மில் பலர் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் அலுவலக வேலைகளில் ஈடுபடுகிறோம். ஒரே சமயத்தில் பல வேலைகளை செய்ய முற்படுகிறோம். இதுவும் நமது மூளையை பாதிக்க கூடும். அதிகம் யோசிப்பது, சூழ்நிலையை சமாளிக்க தெரியாமல் திணறுவதி போன்ற பல விஷயங்களால்  மன அழுத்தமும் பதற்றமும் அதிகரிக்கும். இதை தவிர்க்க, நாம் யோகா அல்லது மெடிட்டேஷன் போன்ற பழக்க வழக்கங்களை பின்பற்றுவது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். 


3.தூக்கமின்மை:


உலகில் பல கோடி பேர், இன்சோம்னியா (Insomnia) எனப்படும் தூக்கமின்மை நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், நாள்பட்ட நோய்கள் வரவும் பல வாய்ப்புகள் இருக்கின்றது. தூக்கமின்மையினால் உடற் சோர்வு நீங்காதது போன்ற உணர்வு இருக்கும். இதனால், மூளை மந்தமாக செயல்படும். மேலும், உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் அது எளிதில் உடலை விட்டு சரியாகாமல் இருக்கும். இது, இன்னும் பல வகையான நோய் பாதிப்புகளுக்கு வழி வகுக்கும். 


4.குடிப்பழக்கம்:


வளர்ந்து வரும் உலகில் பலர் குடிப்பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். குடி பழக்கம் அளவுக்கு மீறி போகும் போது கண்டிப்பாக அது பிரச்சனையில் முடியும். இது, டிமன்ஷியா எனப்படும் மறதி நோய் உருவாக வழி வகுக்கலாம். குடிப்பழக்கம் மூளை செல்களையும் பாதிப்படைய செய்யும். மேலும், மூளையின் திசுக்களையும் குடிப்பழக்கம் சுருக்கும் என கூறப்படுகிறது. இதனால், மூளையை ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வைக்க முடியாது. 


5.புகைப்பழக்கம்: 


புகைப்பழக்கம் உயிருக்கு கேடு என்று எத்தனை வாசகத்தை படித்தாலும், புகைப்பவர்களுக்கு இதன் அர்த்தம் புரியவே புரியாது. புகைப்பழக்கதால், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் மூளையை கண்டிப்பாக பாதிக்கும் என மருத்துவர்கள் பலர் எச்சரிக்கின்றனர். அதனால், புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்போர் இதை குறைத்து கொள்வதும் பின்பு முழுமையாக தவிர்ப்பதும் உடலுக்கு நல்லது. 


மேலும் படிக்க | PCOD இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..? பிக்பாஸ் லாஸ்லியா கூறும் ஈசி டிப்ஸ் இதோ !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ