தோல்வியை கண்டால் பயந்து நடுங்கும் ‘அந்த’ 5 ராசிக்காரர்கள்..! யார் தெரியுமா..?
Zodiac Signs Who Has Fear Of Failure: சில ராசியை சேர்ந்தவர்களுக்கு தோல்வியை கண்டாலே பிடிக்காதாம். யார் அந்த ராசிக்கார்கள்?
தோல்வி என்பது அனைவரையும் கொஞ்சமாவது பயப்பட செய்யும் விஷயம்தான். தோல்வி பயம், உலகில் உள்ள அனைவருக்கும் நிதர்சனமானது. சிலர், “தோல்வியாவது வெற்றியாவது, வழியில் வரும் வாய்ப்புகளை தவற விட கூடாது” என எண்ணுவர். ஆனால், ஒரு சிலரோ வெளியில் இது போன்று பேசினாலும் மனதிற்குள் தோல்வியை நினைத்து அப்படி பயப்படுவர். வெளியில் அதை பெரிதாக காட்டிக்கொள்ளமல் இருப்பர்.
1.கன்னி:
லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது, கன்னி ராசியை சேர்ந்தவர்கள். இந்த ராசியை சேர்ந்தவர்கள், எதை செய்தாலும் அதை கச்சிதமாக செய்ய வேண்டும் என்று யோசிப்பர். எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் இவர்களது குறிக்கோள் மட்டும் எப்போதும் பெரிதாகவே இருக்கும். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை வெற்றிகரமாக செய்ய இவர்களுக்கு தூண்டுகோளாக இருப்பது, தோல்வி பயம் மட்டுமே. சுற்றுலா செல்வது, வீட்டு விஷேஷங்களை ஏற்பாடு செய்வது என அனைத்து திட்டமிடல்களையும் இவர்களே தனி ஆளாக செய்வர். இவர்கள், அந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதில்லை, தோல்வி அடைந்து விட கூடாது என்ற பயத்துடன் செயல்படுகின்றனர். இந்த குணாதிசயத்தினால் இவர்கள் பல சமயங்களில் அபாயங்களை மேற்கொள்ள பயந்து பெரிய வாய்ப்புகளை நழுவ விட்டுவிடுவர்.
2.மகரம்:
மகர ராசியை சேர்ந்தவர்கள், அனைத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எண்ணுவர். வெளியில் எவரும் போட்டிக்கு இல்லையென்றால் கூட, தன்னையே ஒரு போட்டியாளராக கருதி, அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெற எண்ணுவர். இவர்கள் இப்படி இருப்பதை பார்க்கும் பலர், இவர்களை “லட்சியவாதி” என்ற பிரிவில் அடக்குவதுண்டு. ஆனால் உண்மையில் இவர்கள் தோல்வி அடைந்து விட கூடாது என்ற எண்ணத்தாலேயே இவர்கள் தான் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுப்புடன் செயல்படுகின்றனர்.
மேலும் படிக்க | இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதலே கைகூடாது..! யார் அந்த ராசியே இல்லாத ராசிக்காரர்கள்?
3.கடகம்:
கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் உணர்ச்சிகள்தான் பெரும்பாலான சமயங்களில் அவர்களை வழி நடத்தும். ஆனால் அதுவே அவர்களை சமயங்களில் வம்பில் மாட்டி விட்டுவிடும். இவர்கள், தன்னை மட்டுமன்றி தன்னை சுற்றி இருப்பவர்கள் குறித்தும் அதிகமாக யோசிப்பர். தனக்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என்று யோசிப்பதை விட, தன் அன்புக்குரியோருக்கு எதுவும் ஆகிவிட கூடாது என்று யோசிப்பர். இதனாலேயே இவர்கள் கிடைக்கும் பல வாய்ப்புகளை இழந்து விட கூடும். இது மிகவும் நல்ல குணாதிசயம் என்றாலும், இவர்கள் பிறரிடம் ஏமாற இதுவே பெரிய காரணமாக அமையும். தான் பெறும் வெற்றியை, தான் பெரிதாக கொண்டாடுவதை விட பிறர் அதிகம் கொண்டாட வேண்டும் என்று நினைப்பர். இதுவே இவர்களை வெற்றிக்கான பாதையில் வழி நடத்தும்.
4.ரிஷபம்:
ரிஷப ராசியை சேர்ந்தவர்கள் நிலைத்தன்மையை விரும்புபவர்களாக இருப்பர். இவர்கள், வெளியில் பெரிய தைரியசாலி போல காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் தோல்வியை கண்டு நடுங்குபவர்களாக இருப்பர். இதனாலேயே இவர்கள் புது விஷயங்களை கையாளமல் இருப்பர். ஆனால், இவர்களுக்குள்ளும் அவர்கள் பயப்படும் புது சவால்களை எதிர்கொள்ளும் திறன் இருக்கும். தோல்வி பயத்தாலேயே இவர்கள் அது போன்ற வாய்ப்புகளை நழுவ விடுகின்றனர். இவர்கள் தன்னை தானே நம்பி சில செய்களில் இறங்கினாலே போதும், கண்டிப்பாக அது வெற்றிப்பாதையில் செல்லும்.
5.மீனம்:
மீன ராசிக்காரர்கள், கனவுலகில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் என கூறுவதுண்டு. வெற்றியை நினைத்து கனவு கண்டாலும் தோல்வி பயத்தால் பெரிதும் எந்த புது வாய்ப்புகளையும் எதிர்கொள்ளாமல் இருப்பர். இவர்கள், தன் வேலைக்கு கிடைக்கும் விமர்சனங்களை நினைத்து பயப்படுவர். தோல்வியால் தான் ஏமாற்றம் அடைந்து விடுவோமோ என்று நினைப்பதை விட, பிறர் தன்னால் ஏமாற்றம் அடைந்து விடுவரோ என்று அதிகம் பயப்படுவர். இதை விடுத்து, சிறிதளவு தன் மீதுள்ள நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கொண்டாலே இவர்கள் வெற்றி அடைவது உறுதி.
மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு பொறுப்பே இருக்காது..! யார் அவர்கள்..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ