இந்த உலகில் பல லட்சம் கோடிக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இதில் அனைவருக்கும் அனைவரையும் பிடித்து விடும் என கூறிவிட முடியாது. ஒரு சிலரின் குணாதிசத்தை வைத்தோ அல்லது வெளித்தோற்றத்தை வைத்தோதான் பலர் பலரை எடை போடுகின்றனர். இதனால் ஒரு சிலருக்கு ஒரு சிலரை பிடிக்காமல் போய் விடுகிறது. இருக்கும் 12 ராசிகளில் குறிப்பிட்ட 5 ராசிகளை மட்டும் சிலருக்கு ஏனோ பிடிப்பதில்லை. அந்த ராசிக்காரர்களின் குணாதிசயங்கள், அப்படி பிடிக்காமல் போவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. யார் அந்த ஐந்து ராசியை சேர்ந்தவர்கள். இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மேஷம்:


12 ராசிகளில் முதலில் வரும் ராசி, மேஷம். அனைவருக்கும் பிடிக்காத ராசிகளின் லிஸ்டிலும் முதலில் இந்த ராசியே இருக்கிறது. இவர்களிடம், பிறருடன் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமும், என்ன செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பது போன்ற எண்ணங்களும் மேலோங்கி இருக்கும். இந்த உறுதியான போட்டி குணாதிசயத்தை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இந்த ராசியை சேர்ந்த பலர், பெரும்பாலும் தலைமை பதவியில் இருப்பவர்களாக இருப்பர். இவர்கள், சமயங்களில் தனது உணர்ச்சிகள் மட்டும் முக்கியம் என நினைத்து பிறரை பற்றி கவலைப்படாத நிலைக்கு சென்று விடுவர். இதனால், பலர் இவர்களால் துன்பப்படுவர். இவர்கள் இந்த குணாதிசயத்தை மாற்றிக்கொண்டால், பலருக்கு இவர்களை பிடிக்க வாய்ப்புகள் உள்ளது. 


2.விருச்சிகம்:


விருச்சிக ராசியை சேர்ந்தவர்களை பெரும்பாலானோர் பல சமயங்களில் தவறாக புரிந்து கொள்கின்றனர். இவர்கள், தங்களது உணர்வுகள் மற்றும் தாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை எப்போதும் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வர். இதனால், பல சமயங்களில் இவர்களுடன் இருப்பவர்களாலேயே இவர்களை புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். சிலர், இவர்கள் ஏதோ ரகசியத்தை காப்பாற்றுபவராக இருப்பார்கள் போலும் என நினைத்து கொளவர். உண்மையில், இவர்கள் அனைவரிடமும் நேர்மையாக இருப்பர். ஒருவர் கூறும் விஷயங்களை இன்னொருவரிடம் சென்று கூற மாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்களை நன்கு அறிந்தவர்களுக்கு இவர்களை பற்றி நன்றாகவே தெரியும். 


மேலும் படிக்க | பயணம் செய்தால் வாந்தி-மயக்கம் வருகிறதா..? ‘இதை’ செய்யுங்க எல்லாம் சரி ஆகிடும்..!


3.மகரம்:


மகர ராசியை சேர்ந்தவர்கள், அவர்களின் லட்சியத்திலேயே எப்போதும் குறிக்கோளுடன் இருப்பர்கள். சிலர் இந்த குணாதிசயத்தை மிகவும் தந்திரமான யுத்தி என நினைத்து தவறாக புரிந்து கொள்வதுண்டு. உண்மையில் இவர்கள் நிதர்சனத்தை பேசுபவர்களாக இருப்பர். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டு, இவர்களை வெறுப்பதுண்டு. மகர ராசிக்காரர்களுக்கு மாறாத உறுதியும், பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். 


4.கும்பம்:


கும்ப ராசியை சேர்ந்தவர்கள், புத்திசாலித்தனமாகவும் வழக்கத்திற்கு மாறான சிந்தனைகளை கொண்டவர்களாகவும் இருப்பர். சிலர் இதனாலேயே கூட்டத்தில் இருந்து பிரித்து பார்க்கப்படுபவர்களாக இருப்பர். ஒரு சிலர் இவர்கள் யோசிக்கும் விதங்களை விசித்திரமானது என எண்ணுவதுண்டு. இதுவே இவர்கள் தனித்து விடப்படுவதற்கு காரணம். இதனால், இவர்களை கூட்டத்துடன் ஒத்து இருப்பவர்களுக்கு பிடிக்காமல் போகலாம். 


5.தனுசு:


எப்போதும் சாகசத்தையும் சுதந்திரத்தையும் விரும்புபவர்கள், தனுசு ராசியை சேர்ந்தவர்கள். இவர்களின் இந்த குணாதிசயமே சமயங்களில் இவர்களை பிடிக்காமல் செய்து விடுகிறது. தனித்துவமாக செயல்பட விரும்பும் இவர்கள், எந்த உறவிற்குள்ளும் செல்ல பயப்படுவர். இதனால், பல நல்ல உறவுகளும் இவர்களின் கையில் கிடைக்காமல் போய்விடும். இவர்களின் நேர்மை தன்மையை பலர் உணர்வின்மையாக எடுத்துக்கொள்வர். இவர்கள், தங்களின் உறவுகளை தக்க வைத்துக்கொள்ள கொஞ்சம் முயற்சி செய்தால் பலரின் வெறுப்பில் இருந்து தப்பிக்கலாம். 


மேலும் படிக்க | தோல்வியை கண்டால் பயந்து நடுங்கும் ‘அந்த’ 5 ராசிக்காரர்கள்..! யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ