பயணம் செய்தால் வாந்தி-மயக்கம் வருகிறதா..? ‘இதை’ செய்யுங்க எல்லாம் சரி ஆகிடும்..!

Motion Sickenss Tips In Tamil: சிலருக்கு பயணம் செய்தால் வாந்தி-மயக்கம் வரும். இதை தவிர்ப்பது எப்படி? 

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2023, 08:20 AM IST
  • சிலருக்கு பயணங்களின் போது வாந்தி-குமட்டல் வரும்.
  • இதனால் நெடுந்தூர பயணங்கள் கடினமாகும்.
  • பயணங்களின் போது இதை தவிர்ப்பது எப்படி?
பயணம் செய்தால் வாந்தி-மயக்கம் வருகிறதா..? ‘இதை’ செய்யுங்க எல்லாம் சரி ஆகிடும்..!  title=

பஸ், கார், ஆட்டோ, தீம் பார்க்கில் இருக்கும் ரைடுகளில் பயணம் செய்யும் போது சிலருக்கு அசெளகரியங்கள் ஏற்படும். இதனால் இன்னல் படுவோர் பலர் உள்ளனர். குடும்பத்தினருடன் சுற்றுலாவுக்கு செல்கையில் வாந்தி வரக்கூடாது என்பதற்காக பேசாமல் இருப்பர் அல்லது எலுமிச்சை பழத்தை நாசி அருகில் வைத்திருப்பர். இவர்களால் நண்பர்களுடன் வேடிக்கை பூங்காக்களுக்கு செல்லும் போதும் எந்த ராட்டினங்களிலும் சுத்த முடியாமல் போகும். இவ்வாறு பாதிக்கப்படுவதற்கு Motion Sickness என்று பெயர். இது எதனால் வருகிறது? இதை சரி செய்வது எப்படி? 

அசௌகரியங்கள் ஏற்பட காரணம்..

மனிதர்கள் அனைவருக்கும் உடல் சமநிலையை ஒழுங்குப்படுத்தும் லேபரிந்த் என்ற நுண்ணிய அமைப்பு உட்செவிப்பகுதியில் இருக்கும். பயணம் மேற்கொள்கையில் ஏற்படும் அசைவுகளின் போது நம் உடலை சமநிலையை இதுதான் பேணும். இந்த லேபரிந்தின் செயல்பாட்டை மீறி, உடலின் சமநிலை தவறும் போது அசௌகரியங்கள் ஏற்படுகின்றன. 

இது போன்ற அசௌகரியங்களால் குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இது, வளர வளர சிலருக்கு சரியாவதுண்டு. ஆனால் ஒரு சிலர் வளர்ந்த பின்பும் பயணம் செய்கையில் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி போன்ற அசௌகரியங்கள் ஏற்படும். 

மேலும் படிக்க | தலைமுடி வேகமா கருகருன்னு வளரனுமா? ‘இதை’ செய்தால் மட்டும் போதும்!

தீர்வுகள் என்ன..?

>பயணம் செய்வதற்கு முன்னர், மருத்துவரிடம் சென்று உடல் நிலைக்கேற்ப பரிந்துரைக்கப்படும் மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். 

>எந்த நேரத்திற்கு என்ன மருந்துகள் எடுத்துக்கொள்ளும் படி மருத்துவரால் கூறப்படுகிறதோ, அதை நேரம் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். 

>அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் தூக்கம் வரவழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும். இதனால் பயணங்களின் போது தூங்க நேரிடுவதால் வாந்தி-மயக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். வாகனம் ஓட்டுபவராக இருந்தால் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. 

>தொலை தூர பயணங்களின் போது காதுகளுக்கு பின்புறம் ஒட்டும் படியான பேட்ச்களை வாங்கி கொள்ளலாம். 

>பயணத்திற்கு முன்னரே இஞ்சியை துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பயணம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சிறிதளவு இஞ்சி துருவலை வாயில் போட்டுக்கொள்ளவும்.  

>இஞ்சி துருவல் குமட்டலை தடுக்கும் என சில மருத்துவர்களால் கூறப்படுகிறது. எனவே, இதை பயன்படுத்தலாம். 

>புதினா எண்ணெயை 3 துளிகள் கைக்குட்டையில் நனைத்து பயணத்தின் போது கூடவே வைத்துக்கொள்ளலாம். இதன் வாசம் குமட்டலை கட்டுப்படுத்தும். 

>ஒரு முழு எலுமிச்சை பழத்தை பயணத்தின் போது கையில் வைத்துக்கொள்வது மிகவும் நன்று. இதை இரண்டாக வெட்டி அதன் வாசத்தை முகர்வதால் குமட்டலை தவிர்க்க முடியும். 

>எலுமிச்சை பழம், வயிற்று அமிலங்களை சமநிலை படுத்துகிறது. குமட்டலை குறைக்க இது உதவும். இதில் உள்ள சிட்ரஸ் வாசம் பயணம் தொடர்பான நோய் இருப்பவர்களுக்கு நன்கு பயணளிக்கும். 

>பயணங்களின் போது ஏலக்காயை வாயில் போட்டு மெல்லலாம். இதனால் வாந்தி மற்றும் குமட்டலையும் தவிர்க்கலாம். 

>பயணத்தின் போது தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை நேராமல் இருக்க உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். 

>பயணத்தின் போது திடமான உணவுகளை தவிர்க்க வேண்டும். முடிந்த வரை பழ ஜூஸ்களாக இருந்தாலும் அதில் நீர் அதிகம் நிறைந்த பழங்களின் சாறுகளையே பருக வேண்டும். 

>காரமான, கொழுப்பு நிறைந்த உணவுகளை கண்டிப்பாக பயணங்களின் போது தவிர்க்க வேண்டும். 

மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி..? இந்த டிப்ஸை படிங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News