ஒரே இரவில் முகப்பொலிவை அதிகரிக்க இந்த 6 ஃபேஸ் பேக்குகள் போதும்
பல ஃபேஸ் பேக்குகள் உள்ளன, அவை முகத்தில் தடவும்போது, சருமம் பளபளப்பாகவும், குறைபாடற்றதாகவும் இருக்கும். இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கின் டேனிங் மற்றும் கரும்புள்ளிகள் பிரச்சனையும் குறைகிறது.
சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்க பல வகையான ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்தப்படுகிறது. சில ஃபேஸ் பேக்குகள் தழும்புகளை நீக்குகின்றன, சில ஃபேஸ் பேக்குகள் ஸ்கின் தன்னிங்க டேனிங்கை (Tanning) நீக்குகின்றன, சிலவற்றைப் பயன்படுத்தும்போது பருக்கள் நீங்கும் மற்றும் சில ஃபேஸ் பேக்குகள் சருமத்தில் உள்ள வறட்சி அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சந்தையில் வாங்கும் ஃபேஸ் பேக்குகளை விட வீட்டில் தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சிறந்த பலனைக் காட்டலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் மலிவானவை மட்டுமல்ல, அவை சருமத்திற்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் இந்த பேக்குகள் இயற்கையான பொருட்களிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.
குறைபாடற்ற சருமத்திற்கான ஃபேஸ் பேக்குகள் | Face Packs For Spotless Skin
கற்றாழை மற்றும் தேன்:
கற்றாழை சருமத்திற்கு ஒன்றல்ல பல நன்மைகளைப் தருகிறது. கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மற்றும் முகப்பரு, பருக்கள், தோல் எரிச்சல் மற்றும் வறட்சி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. ஃபேஸ் பேக் செய்ய, 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டீஸ்பூன் தேன் கலக்கவும். அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி, பின்னர் முகத்தை கழுவவும்.
மேலும் படிக்க | உங்கள் துணையை படுக்கையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க..‘இதை’ செய்யுங்கள்!
மஞ்சள் மற்றும் பால்:
எளிதில் தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக்கின் விளைவும் ஆச்சரியமாக இருக்கிறது. அரை தேக்கரண்டி மஞ்சளை (Turmeric) 3 முதல் 4 தேக்கரண்டி பாலுடன் கலக்கவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் வைத்திருந்து பின் கழுவவும். முகம் பளபளப்பது மட்டுமின்றி, சருமத்தில் தோன்றும் பருக்கள் பிரச்சனையும் நீங்கும்.
பாலாடை மற்றும் குங்குமப்பூ:
இந்த ஃபேஸ் பேக்கை உருவாக்க, ஒரு ஸ்பூன் குங்குமப்பூ மற்றும் ஒரு ஸ்பூன் பாலாடை சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள டேனிங்கை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். முகத்தில் 20 நிமிடம் வைத்த பிறகு, கழுவவும். சருமம் பொலிவாக மாறும்.
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை:
உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால், ஆழமான கரும்புள்ளிகள் கூட இலகுவாகி, முகம் பொலிவாக மாறும். ஒரு ஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து கலவையை தயார் செய்யவும். இந்தக் கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு முறை வரை முகத்தில் தடவலாம்.
தக்காளி மற்றும் தயிர்:
லாக்டிக் அமிலம் மற்றும் தயிரில் உள்ள மற்ற பண்புகள் சருமத்திற்கு சிறந்ததாக அமைகிறது. தோல் மென்மையாகவும், பளபளப்பாகவும் தோன்றத் தொடங்குகிறது. இந்த ஃபேஸ் பேக் செய்ய, ஒரு ஸ்பூன் தயிரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் மசித்த தக்காளி சேர்க்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவவும். முகம் பளபளப்பாகத் தோன்றும்.
கடலை மாவு மற்றும் தயிர்:
கடலை மாவு மற்றும் தயிர் கலந்த இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கலாம். இந்த ஃபேஸ் பேக்கை உருவாக்க, 2 ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் கலக்கவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் மெதுவாக கழுவவும். தோலில் பளபளப்பு தோன்றும்.
மேலும் படிக்க | ஜாக்கிரதை! வெந்நீரில் முகம் கழுவினால் ‘இந்த’ பிரச்சனைகள் வரலாம்!
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ