உங்கள் துணையை படுக்கையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க..‘இதை’ செய்யுங்கள்!

Erotic Tips Tamil: ஆண்களுக்காக இருந்தாலும், பெண்களுக்காக இருந்தாலும் படுக்கையறையில் என்ன செய்ய வேண்டும் என்பது சில சமயங்களில் தெரியாமல் போகும், அதற்கான சில டிப்ஸ், இதோ. 

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2024, 06:57 PM IST
  • பெண்களை படுக்கையறையில் மகிழ்ச்சி படுத்துவது எப்படி?
  • படுக்கையறையில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது?
  • ஜோடிகளுக்கான டிப்ஸ் இதோ!
உங்கள் துணையை படுக்கையில் மகிழ்ச்சியாக வைத்திருக்க..‘இதை’ செய்யுங்கள்! title=

ஒருவரின் பாலியல் வாழ்க்கை அவரின் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளதாக உள்ளது. உங்கள் மன நலனில் உள்ள பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையைத் திரும்பப் பெற, மேலும் நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் செய்ய வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்வதும், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு வித உளவியல் ரீதியான பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

ஆண்களுக்கான தூண்டுதல்..பெண்களுக்கான தூண்டுதல்..

பாலியல் உணர்ச்சிகளை, உடலுறவு கொள்வதற்காக தூண்டப்படும் உணர்ச்சிகள் மற்றும் ஆர்வத்தினை Sex Drive எனக்கூறுவர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான இந்த உணர்ச்சிகள், பல விதங்களில், பல வகைகளின் வேறுபடும். ஆண்கள் மற்றும் பெண்களின் பாலியல் ஆசை அளவுகள் பெரும்பாலான சமயங்களில் வேறுபடும் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆண்களுக்கு பாலியல் உணர்ச்சிகள் ஏற்படுவதற்கு வெகு சில நிமிடங்களே ஆகும் என்றும், அதுவே பெண்களுக்கு இதற்கான நேரம் மாறுபடும் என்றும் கூறப்படுகிறது. 

ஆண்கள் பலர், அவர்களது பார்டனருக்கு ஈராமாகி விட்டால் (Wet) அவர்கள் உடலுறவிற்கு தயாராகி விட்டதாக நினைக்கின்றனர். ஆனால், இது பெரும்பாலான சமயங்களில் தவறானதாகிவிடும். அப்படி ஆவது, அவர்கள் ரெடியாவதற்கு முன்னால் நிகழ்வதாகவும். இப்படி, பெண்களின் உடல் குறித்தும் அவர்களின் பாலியல் ஆசை குறித்து தெரியாதவர்களுக்காகவுமான டிப்ஸ்..இதோ. 

பொறுமை அவசியம்

இந்த விஷயத்தில் அவசரப்பட வேண்டாம். நீங்கள் அதற்குள் விரைந்தால், உங்களது பார்ட்னர் ஒருபோதும் படுக்கையறையில் மகிழ்ச்சியாக உணர மாட்டார். நிதானமான சில முன்விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். அரவணைப்புடன் இதனை தொடங்குங்கள். அவரது உடலில் உள்ள அனைத்து பாகங்களும் தயாராகும் வரை நீங்கள் மெதுவாக செயல்பட வேண்டும். அவரது உடலை எந்த அளவிற்கு ஆராய முடியுமோ, ஆராயுங்கள். உடலில் உள்ள எந்த பாகங்கள் பாலியல் உணர்ச்சியை தூண்டுமோ அவை அனைத்தையும் ஆராயவும். 

மேலும் படிக்க | 40 வயதிற்கு பின்னர் படுக்கையறை சுகத்தை அதிகரிப்பது எப்படி..? இதோ சில டிப்ஸ்…!

உங்கள் பார்ட்னரிடம் கேட்பது:

செக்ஸ் சில நேரங்களில் உங்கள் துணையைப் பற்றியதாக இருக்க வேண்டும். நீங்கள் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்று கேட்டுகொள்ளுங்கள். இதுவே அவர்களுக்கு சிறப்பான உணர்வை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழி. அவர் விரும்பாதவை அல்லது விரும்பும் விஷயங்களை அவரிடமே கேட்கலாம். படுக்கையில் உங்கள் பார்ட்னர் விரும்புவதைப் பற்றி மேலும் அறிய இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கொள்ளவும். நீங்கள் முயற்சி செய்து தோல்வியடைவதற்கான பதற்றத்தையும் அழுத்தத்தையும் இது எளிதாக்குகிறது. 

முத்தங்கள்:

முத்தங்கள், உடலுறவில் பெரிய பங்கினை ஆற்றுகின்றன. அழுத்தமாக முத்தம் கொடுப்பதற்கு பதில், ஆழமாக முத்தமிடுங்கள். பெண்களுக்கு அழகான, ஆழமான முத்தங்கள் மிகவும் பிடிக்கும். அப்படி முத்தம் கொடுக்கையில் அவரது பின்புற தலை முடி அல்லது அவரது மார்பக பகுதியில் உங்களின் கைகள் இருப்பது போல பார்த்துக்கொள்ளுங்கள். 

வருடி கொடுத்தல்..

அனைத்திற்கும் தயாரான பிறகு, அவரது மார்பகம் மற்றும் முனை பகுதிகளை மெதுவாக வருடிக்கொடுக்கவும். மார்பகங்கள் மற்றும் முலைக்காம்புகள் மிகவும் உணர்திறன் கொண்டவை மற்றும் மென்மையான தொடுதல் தேவை. மெதுவாக அவர்களைத் தழுவி மகிழ்விக்கவும் ஆனால் அப்படி செய்கையில் உங்கள் பார்ட்னருடன் பேச மறக்காதீர்கள். இது அவர்களுக்கு மேலும் உணர்ச்சிகளை தூண்டும். 

மேலும் படிக்க | படுக்கையறை வாழ்க்கை சலித்து விட்டதா? அதை புதுப்பிப்பது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News