சிறந்த கணவர்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனக்கு கணவன் வேண்டும் என்று ஒரு பெண் மாப்பிள்ளை தேடுகிறாரோ இல்லையோ அந்த பெண்ணின் தாய்-தந்தை மும்முரமாக தேட ஆரம்பித்துவிடுவர். சிறந்த கணவர் அமைய வேண்டும் என்பது அந்த பெண்ணின் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தின் விருப்பமும் கூட. சிறந்த கணவனாக, ஒரு சில ராசிக்கார்கள் மட்டுமே இருப்பார்களாம். யார் அவர்கள்..?


1.ரிஷபம்:


ரிஷப ராசி உடைய ஆண்கள் மிகவும் நம்பிக்கைக்குறியவர்களாக இருப்பார்களாம். அது மட்டுமன்றி, எல்லா இடங்களிலும் நியாயமாக நடந்து கொள்வராம். ‘ஒருவனுக்கு ஒருத்தி..’ பாலிசி கொண்டவர்களாம் இவர்கள். ஒருவர் மீது காதல் வந்துவிட்டால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களாம். இதில் சிலர், காதல் கடிதம் எழுதுவது, அன்புக்குரியோருக்கு அன்பான பரிசு கொடுப்பது என பல நல்ல திறன்களை கொண்டிருப்பராம். மனதில் உள்ளதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாம் இவர்கள். 


2. மீனம்:


மீன ராசிக்காரர்கள் வார்த்தை தவறாத நாணயஸ்தர்களாம். ஒரு உறவு என்று வந்துவிட்டால் அவர்கள் மீது தன்னையும் மீறி அன்பு வைப்பார்களாம். இவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அடிக்கடி பூ வாங்கித்தருவது அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கித்தருவது என பல வகையான ரொமாண்டிக் விஷயங்களை செய்வார்களாம். இதனால், இவர்களுடைய பார்ட்னர்களுக்கு இவர்கள் மீது சலிப்பே தட்டாதாம். 


மேலும் படிக்க | Hair extension செய்து வழுக்கை தலையான பெண்.. உஷார் பெண்களே !


3. கடகம்:


லிஸ்டில் அடுத்து இருப்பது, கடக ராசிக்காரர்கள். இவர்களுக்கு பெரிதும் வீட்டை விட்டு வெளியேற பிடிக்காதாம். அதனால், அன்புக்குரியோருடன் இவர்கள் அதிகம் நேரம் செலவிட விரும்புவார்களாம். நீங்கள் வெளியில் போக பிடிக்காத ஆள் என்றால் உங்களுக்கு கடக ராசிக்காரர்கள் கரெக்டாக இருப்பார்கள். இவர்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்துவதில் எந்த நெருடலும் இருக்காதாம். எதை செய்தாலும் கொஞ்சம் அதிகமாக செய்யும் இவர்கள், காதல் மழையையும் கொஞ்சம் அதிகமாகவே தூவுவார்களாம். கடுஞ்சொல் சொன்னால் கூட தாங்க முடியாதவர்களாம் இவர்கள். கடக ராசிக்காரர்களின் மனைவிகளே, இந்த தங்கத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். 


4. தனுசு: 


தனுசு ராசிக்காரர்களுக்கு அவர்களது அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும். அதனால், மனைவியின் சந்தோஷத்திற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களாம். அவர்களின் உலகமே தன் பார்ட்னரை சுற்றி சுழலுவதாக கருதுபவர்கள் இவர்கள். நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்களின் லிஸ்டில் இவர்களும் அடங்குவர். இவர்களுக்கு பரந்து விரிந்த மனமும் ஆசையும் உள்ளதால் எதிரில் உள்ள நபர் ஏதேனும் தவறு செய்தால் மன்னித்துவிடுவார்களாம். 


5. சிம்மம்:


லிஸ்டில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருபவர்கள், சிம்ம ராசிக்காரர்கள். இவர்களுடன் இருப்பவர்களுக்கு நேரம் போவதே தெரியாதாம். பிறரை தங்களுக்காக மாற்ற முயற்சிக்காதவர்கள் இவர்கள். இந்த ராசிக்காரர்கள், தங்கள் மனைவியை பத்திரமாத்து தங்கம் போல தாங்கு தாங்கென்று தாங்குவார்களாம். இவர்கள் செய்யும் சில செயல்கள் சில மனைவி மார்களுக்கு கோபம் ஏற்படுத்தினால் கூட, அவர்களால் நீண்ட நாட்களுக்கு இவர்கள் மீது கோபமாக இருக்க முடியாதாம். இதனால் இவர்கள் திருமண வாழ்க்கை எப்போதும் சுமூகமாக போகுமாம். 


6. மகரம்:


மகர ராசிக்காரர்களிடம் ‘நச்’சென்று 4 சிறப்பம்சங்கள் இருக்கிறதாம். நம்பிக்கை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல், உண்மையாக இருத்தல் மற்றும் அதிகம் காதலிக்கும் திறன். இவையனைத்தும் இவர்களை சிறந்த கணவன்மார்களாக உருவாக்கும். ஏதாவது சண்டை ஏற்பட்டால் ஒன்றும் அறியாத முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் மனைவியை மயக்குவதில் வல்லவர்கலாம் இவர்கள். பிறரை காயப்படுத்த மனம் இல்லாதவர்களாக வலம் வரும் இந்த ராசிக்காரர்கள் எப்படி தனது அன்புக்குரிய மனைவியை காயப்படுத்துவர்? 


மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் செய்யவே தெரியாது..! யார் அந்த முரட்டு சிங்கிள்ஸ்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ