வட்டியை வாரி வழங்கும் இந்த வங்கிகள்.. சீனியர் சிட்டிசன்களுக்கு கொண்டாட்டம்
FD interest Rates: நீங்கள் உங்கள் FD மீது அதிக வட்டி பெற விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில், இந்த மூன்று வங்கிகளும் எஃப்டிக்கு சிறந்த வட்டியை தருகின்றன.
ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்: நாம் அனைவரும் நம் பணத்தை எங்காவது நல்ல இடத்தில் முதலீடு செய்து அதில் நல்ல லாபத்தைப் பெற விரும்புகிறோம். தகவல் பற்றாக்குறையால், எந்த ஒரு நல்ல இடத்திலும் சேமிப்பை முதலீடு செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் முதலீட்டின் முதல் தேர்வாக FD ஆக உள்ளது. ஏனெனில் நாம் செய்யப் போகும் முதலீட்டுக்கு ஆபத்து இல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கருதும் நடுத்தர வர்க்க மக்களின் முதல் முன்னுரிமை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்குத்தான். பங்குச்சந்தை, ஏலச்சீட்டு திட்டங்கள் போன்றவற்றில் இருக்கின்ற அபாயம் இதில் கிடையாது. அதிலும் பொதுத்துறை வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் செய்யத்தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் நீங்களும் உங்கள் சேமிப்பை ஃபிக்ஸட் டெபாசிட் (FD) திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால். அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தச் செய்தி உங்களுக்காகத்தான். இந்தச் செய்தியின் மூலம், முதலீட்டுக்கான சிறந்த வட்டி விகிதங்களைப் பெறுகின்ற அந்த மூன்று வங்கிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அத்தகைய சூழ்நிலையில், சிறந்த வருமானத்தைப் பெற உங்கள் சேமிப்பை இந்த வங்கிகளில் முதலீடு செய்யலாம். இந்த கட்டுரையில், அவற்றைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம் –
மேலும் படிக்க | உங்கள் வாழ்க்கையில் பண மழை பெய்ய வேண்டுமா? ‘இதை’ செய்யுங்கள் போதும்!
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) -
தற்போது, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 1-ஆண்டு, மூன்று ஆண்டு, மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முறையே 6.8 சதவிகிதம், 6.5 சதவிகிதம் மற்றும் 6.5 சதவிகிதம் என்ற விகிதங்களுடன், மிக உயர்ந்த அடுக்குக்கு 7.1 சதவிகிதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதேபோல், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா - எஸ்பிஐ ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
பேங்க் ஆஃப் இந்தியா (Bank of India) -
நீங்கள் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit) இல் முதலீடு செய்ய விரும்பினால். அத்தகைய சூழ்நிலையில், இந்த வங்கி FDக்கு 7.25 சதவிகிதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த வங்கியில், நீங்கள் ஒரு வருட FDக்கு 6.50 சதவீத வட்டி விகிதத்தையும், இரண்டு வருட FDக்கு 6.50 சதவீதத்தையும், ஐந்தாண்டு FDக்கு 6 சதவீத வட்டி விகிதத்தையும் பெறுகிறீர்கள்.
பாங்க் ஆப் பரோடா (Bank of Baroda) -
இந்த வங்கி நிலையான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கி ஐந்தாண்டு FDக்கு 7.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே சமயம் மூன்று வருட FD மீதான வட்டி விகிதம் 6.75 சதவீதம் ஆகும். அதன்படி தற்போது இருக்கின்ற பொதுத்துறை வங்கிகளிலேயே ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மிக அதிகப்படியான வட்டி வழங்குவது இந்த வங்கி தான். மேலும் நாடெங்கிலும் உள்ள மொத்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் இது 10 சதவீதத்தை கொண்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ