ஜோதிட சாஸ்திரப்படி 12 ராசிகளின் தன்மையும் வித்தியாசமானது. அனைத்து ராசிகளும் 9 கிரகங்களால் ஆளப்படுகின்றன. மேலும் இந்த கிரகங்கள் ராசிகளில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த தாக்கத்தின் காரணமாக, ஒவ்வொருவரது பாணி, இயல்பு, தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவை வேறுபட்டிருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் அதிக பணம் செலவழிப்பவர்களாக இருப்பார்கள். அதிக பணம் செலவழிக்கும் ஆடம்பர வாழ்க்கை முறையை அவர்கள் விரும்புகிறார்கள். ஆடம்பர இயல்பு காரணமாக அவர்களிடம் பணம் தங்குவதில்லை. இதுமட்டுமின்றி, தங்களது பொருளாதார நிலை சரியில்லாமல் இருந்தாலும், செலவு செய்வதில் இவர்கள் சளைப்பதில்லை. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இவர்கள் கண்மூடித்தனமாக செலவு செய்கிறார்கள். யோசிக்காமல் செலவு செய்யும் அப்படிப்பட்ட சில ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மிதுனம்


மிதுன ராசி புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது. புதன் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பது மட்டுமின்றி, பணம் செலவழிப்பதிலும் முன்னணியில் இருப்பார்கள். அவர்கள் தங்கள் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் உணவுக்காக அதிகம் செலவு செய்வார்கள். இவர்களிடம் பணம் வந்துவிட்டால் போதும், செலவு செய்ய தாமதிக்க மாட்டார்கள். 


மேலும் படிக்க | MARS TRANSIT: சனியின் ராசியில் செவ்வாயின் சஞ்சாரம்! 3 ராசிகளுக்கு எச்சரிக்கை 


சிம்மம்


சிம்ம ராசி சூரிய கிரகத்தால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் ராஜ வாழ்க்கை வாழ விரும்புவார்கள். இதன் காரணமாக இவர்கள் செலவு செய்ய அஞ்சுவதில்லை. எனினும், சில சமயங்களில் அவர்களின் இந்த பழக்கம் அவர்களை கடன் வாங்கவும் கட்டாயப்படுத்துகிறது. அப்படி கடன் வாங்கி கையில் பணம் வந்த பிறகு, அதை ஒழுங்காக செலவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்காது. மறுபடியும் யோசிக்காமல் செலவு செய்யத் தொடங்கி விடுவார்கள். 


துலாம்


துலா ராசியை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக அளவில் பணம் பெறுவார்கள். விலையுயர்ந்த பொருட்களின் மீதுள்ள நாட்டம் காரணமாக, இவர்கள் இதில் அதிக பணம் செலவழிக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பணம் செலவழிப்பதில் முதலிடத்தில் உள்ளனர். அதிகம் செலவழிக்கும் தன்மையால், இந்த ராசிக்காரர்கள் பணத்தை சேமிப்பது கடினம். சில சமயங்களில் நிதிப் பிரச்சனைகளையும் இவர்கள் சந்திக்க நேரிடும்.


விருச்சிகம்


விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். செவ்வாயின் தாக்கத்தால் இந்த ராசிக்காரர்கள் பணத்தைச் செலவு செய்வதில் மற்றவர்களை விட முன்னிலையில் இருப்பார்கள். இவர்கள் தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு அதிக பணம் செலவழிக்கிறார்கள். பணத்தைப் பொருட்படுத்தாமல் சுதந்திரமாகச் செலவிடுவார்கள். செலவுகள் என்று வரும்போது அவர்கள் தயங்க மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், இவர்கள் கையில் பணம் தங்குவது மிகவும் கடினம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆடம்பரமாய் வாழும் பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க மனைவிக்கு என்ன ராசி? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR