ஆடம்பரமாய் வாழும் பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க மனைவிக்கு என்ன ராசி?

Astrology: இந்த பதிவில் சொகுசு வாழ்க்கையில் அதிக நாட்டம் காட்டும் பெண்களைப் பற்றி பார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 07:06 PM IST
  • கடக ராசிப்பெண்கள் நாகரீகமான மற்றும் பிராண்டட் விஷயங்களை விரும்புகிறார்கள்.
  • ரிஷப ராசிப்பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பதில் நாட்டம் காட்டுவார்கள்.
  • விருச்சிக ராசிப்பெண்கள் செல்வத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலிகள்.
ஆடம்பரமாய் வாழும் பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க மனைவிக்கு என்ன ராசி? title=

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிக்காரர்களின் இயல்பு, நடத்தை மற்றும் எதிர்காலம் குறித்து முக்கியமான விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த தகவல்களின் மூலம், அந்த ராசிக்காரர் எப்படி இருப்பார், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வார் என்பது பற்றிய விவரங்கள் தெரிந்துவிடுகின்றன. 

இந்த பதிவில் சொகுசு வாழ்க்கையில் அதிக நாட்டம் காட்டும் பெண்களைப் பற்றி பார்க்கலாம். இவர்கள் விலையுயர்ந்த பொருட்களை விரும்புகிறார்கள், பல இடங்களை சுற்றிப்பார்க்க ஆசை கொள்கிறார்கள். கேளிக்கைகளை அனுபவிக்க ஆவலாக இருக்கிறார்கள். இவற்றை செய்ய இவர்களிடம் போதுமான பணமும் இருக்கும் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

இந்த ராசிப் பெண்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்

ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். அவர் பொருள் மகிழ்ச்சி, அழகு, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் காரணியாக உள்ளார். இதனால் இந்த ராசி பெண்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்கள் விலையுயர்ந்த பொருட்களை மட்டுமே விரும்புபவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிப்பதில் இவர்கள் நாட்டம் காட்டுவார்கள். 

மேலும் படிக்க | சனி, குரு உட்பட இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றம்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்? 

கடகம்: கடக ராசி பெண்கள் நாகரீகமான மற்றும் பிராண்டட் விஷயங்களை விரும்புகிறார்கள். இவர்கள் உடைகள், ஒப்பனை, அணிகலன்கள் போன்றவற்றுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள். இவை அதிக அளவில் இவர்களிடம் காணப்படும். அதிர்ஷ்டமும் இவர்களுக்கு கை கொடுக்கிறது. பணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். செலவழிப்பதிலும் இவர்கள் வல்லவர்கள். 

துலாம்: துலாம் ராசிக்கு சொந்தக்காரர் சுக்கிரன். இவர் செல்வம், பொருள் மற்றும் மகிழ்ச்சிக்கான காரணியாக உள்ளார். இந்த ராசி பெண்களும் தங்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதிப்பதோடு அதை அள்ளி வீசி செலவழிக்கவும் தயங்குவதில்லை. அவர்களிடம் எப்பொழுதும் அதிக பணம் இருக்கும். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் இவர்கள். 

விருச்சிகம்: விருச்சிக ராசி பெண்கள் செல்வத்தின் அடிப்படையில் அதிர்ஷ்டசாலிகள். பணத்தை ஆடம்பர வாழ்க்கை வாழ பயன்படுத்துவார்கள். தங்களுக்காக மட்டுமல்லாமல் இவர்கள் தங்களது நண்பர்களுக்காகவும் அதிகம் செலவழிப்பார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பணம், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தும் அடைக்கலம் புகும் நபர்கள் இந்த ராசிக்காரர்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News